சந்திரயான்-3 குறித்து சுந்தர் பிச்சை போட்ட ட்வீட்.. கமெண்ட் செய்த எலான் மஸ்க்.. என்ன சொன்னார் தெரியுமா?
வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook) மற்றும் டிவிட்டர் (Twitter) அல்லது எக்ஸ் (X) போன்ற எல்லா சமூக வலைதள தளங்களிலும் முழுக்க முழுக்க சந்திரயான்-3 (Chandrayaan-3) பற்றிய பதிவுகள் தான் ராக்கெட் வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை எல்லாருமே இந்தியாவின் புதிய சாதனை பற்றிய பதிவுகளை தான் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு, பாராட்டாமல் இருக்க முடியுமா? நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை (சந்திரயான்-3) தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த சாதனையை படைக்க இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அதன் அதிகாரிகள் அயராது பணிபுரிந்துள்ளார்.

இவர்களின் அயராத உழைப்பு தான் இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் வெற்றி பெற முதல் காரணம் என்று நாம் அடித்து கூறலாம். வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள இந்த சாதனையை பல பிரபலங்கள் (celebrities) பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சில பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். பாராட்டை தெரிவித்த வரிசையில் நடந்த ஒரு நிகழ்வு கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
அந்த வரிசையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சி.இ.ஓ சுந்தர் பிச்சை (Sundar Pichai), இஸ்ரோவை பாராட்டி, எக்ஸ் என்று பெயர் மாற்றப்பட்ட ட்விட்டர் தளத்தின் வழியாக புதிய ட்வீட்டை (tweet) பதிவு செய்துள்ளார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை அவர்களின் ட்வீட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) எலான் மஸ்க் (Elon Musk) ரிப்ளை செய்துள்ளார். இது கனத்தை பெற்றுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (Vikram lander) மற்றும் பிரக்யான் ரோவர் (Pragyaan Rover) நேற்று நிலவில் வெற்றிகரமாகவும் பத்திரமாகவும் தரையிறக்கப்பட்டது. நிலவில் சாப்ட் லேண்டிங் (Soft landing on moon) செய்த பிறகு, விக்ரம் லேண்டர் இல் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறியது. அதன் பிறகு, பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து அதன் ஆராய்ச்சியை துவங்கியது.

இப்போது ரோவர் அதன் ஆய்வை நிலவில் மேற்கொண்டு வருகிறது. பிாக்யான் ரோவர் நொடிக்கு 1 சென்டி மீட்டர் (1 cm) என்ற வேகத்தில் நிலவின் மணலில் தடம் பதித்து நகர்ந்து கொண்டிருகிறது. இந்த ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு அதன் ஆய்வை துல்லியமாக மேற்கொள்ளும் என்று இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது. நிலவில் ரோவர் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தும் விக்ரம் லேண்டருக்கு அனுப்பப்படும்.
விக்ரம் லேண்டர் அத்தகவலை பூமிக்கு (earth) அனுப்பும். விக்ரம் லேண்டர் பூமிக்கும் நிளவிற்கும் இடையிலான இடைமுக இணைப்பாக செயல்படும். விரைவில் நிலவின் தென்துருவத்தில் புதைந்திருக்கும் ரகசியங்களை இஸ்ரோ கட்டவிழ்க்க போகிறது. இந்தியா புதிய சாதனையை படைத்துவிட்டது. இதற்காக, இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இஸ்ரோவை வாழ்த்தி தனது டிவிட்டர் பக்கம் வழியாக புது டிவீட்டை பதிவிட்டுள்ளார். அதில், "நம்பமுடியாத அற்புத தருணம். இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகள். நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது" என சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டிற்கு 'சூப்பர் கூல் (Super cool)' என மஸ்க் ரிப்ளை கொடுத்துள்ளார். எலான் மஸ்க் சொந்தமாக ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் இப்போது கவனத்தை பெற்று வருகிறது. சந்திரயான்-3 அதன் வேலைகளை அடுத்த 14 நாட்கள் தொடர்ந்து செய்யும் என்று கூறப்படுகிறது. நிலவில் தென்துருவ ரகசியங்கள் விரைவில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications








