Home
News

சொல்லி அடிச்ச சுந்தர் பிச்சை.. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்.. கலக்கலான புதிய அம்சங்கள்.. அதிரும் Google ஏஐ!

"நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா!" என்று கூறும்படியான பல வேலைகளை செய்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai). இருந்தாலும் கூட கூகுள் (Google) நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று "ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி டா!" என்று கொக்கரிப்பது போல் உள்ளது!

ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறையென.. எங்கோ எப்போதோ ஏஐ (AI) என்கிற வார்த்தையை கேட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எங்கு திரும்பினாலும் ஏஐ தான்; எதை தொட்டாலும் ஏஐ தான் என்றாகிவிட்டது. இது யாருக்கு புரியுமோ இல்லையோ கூகுளுக்கு மிகவும் நன்றாகப்புரியும்.

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்.. அதிரும் Google ஏஐ!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வழியாக வெகுஜன மக்களுக்கு கிடைக்கும் பலன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் ஆன பார்ட்-இல் (Google AI Chatbot Bard) தமிழ் மொழிக்கான ஆதரவு உட்பட பல வகையான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியோடு சேர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, குஜராத்தி, பெங்காலி உட்பட மொத்தம் 40 மொழிகளுக்கான ஆதரவு கூகுள் பார்ட் ஏஐ-யில் சேர்க்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளுக்கான ஆதரவை பெற்றுள்ளதால் கூகுள் ​​பார்ட் ஏஐ ஆனது இனிவரும் நாட்களில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

பிராந்திய மொழிகளுக்கான ஆதரவின் கீழ் பயனர்களால் கூகுள் பார்டின் பதில்களை "கேட்க" முடியும். எடுத்துக்காட்டிற்கு, ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பை நீங்கள் கேட்க விரும்பினால் அல்லது ஒரு கவிதையை அல்லது ஒரு கதையை நீங்கள் கேட்க விரும்பினால்.. அந்த வரிகளை உள்ளிட்டு, சவுண்ட் ஐகானை (Sound Icon) கிளிக் செய்யவும். அவ்வளவு தான், பார்ட் ஏஐ அதை உங்களுக்காக படித்துக்காட்டும்!

தென்னிந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் சேர்த்து, தற்போது பிரேசில் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள பல பகுதிகளில் பார்ட் ஏஐ அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பார்டின் பதில்களை எளிதாக சரிசெய்வது (Adjust Bard's Responses), உரையாடல்களை 'பின்' செய்வது மற்றும் அவற்றை ரீநேம் செய்வது (Pin and Rename Conversations) போன்ற புதிய அம்சங்களும் பார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது

இப்போது பார்ட் வழியாக கிடைக்கும் பதில்களை 'அட்ஜெஸ்ட்' செய்ய உங்களுக்கு 5 விருப்பங்கள் அணுக கிடைக்கும்: சிம்பிள் (Simple), லாங் (Long), ஷார்ட் (Short), ப்ரொபெஷனல் (Professional) அல்லது கேஷுவல் (Casual). இவைகளின் கீழ் பார்ட் வழங்கும் பதில்களின் தொனியையும் பாணியையும் (Tone and Style) உங்களால் மாற்ற முடியும்.

மேலும் பார்ட் உடன் நீங்கள் நடத்திய பயன்மிக்க உரையாடல்களை 'பின்' செய்வதற்கும், எளிதில் கண்டுபிடிக்க அவற்றை 'ரீநேம்' செய்வதற்குமான வழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக பார்ட் வழங்கிய பதில்களின் ஒரு பகுதியை அல்லது அனைத்தையும் ஷேரபிள் லிங்க்ஸ் (Shareable Links) வழியாக பகிர்வதையும் கூகுள் எளிதாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Added Tamil Language Support And Many More New Features in Bard AI Chatbot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X