Home
News

இதை கவனிச்சிருக்கீங்களா.. நிறைவேறாமல் போன பெற்றோர் ஆசை.. மனம் திறந்த Google CEO சுந்தர் பிச்சை..

கூகுள் நிறுவனம் மக்களுக்குப் பயனுள்ள வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த பிரபலமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் சுந்தர் பிச்சை (google ceo sundar pichai). இவர் சமீபத்தில் பெற்றோர் ஆசை மற்றும் தனது வாழ்க்கை பயணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நிறைவேறாமல் போன பெற்றோர் ஆசை.. மனம் திறந்த Google CEO சுந்தர் பிச்சை..

சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இவர் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். அதன்பின்பு ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சுந்தர் பிச்சை பிஎச்டி படிக்க வேண்டும் என்பது தான் அவரது பெற்றோர்களின் மிகப்பெரிய ஆசை. குறிப்பாக சுந்தர் பிச்சைக்கு பிஎச்டி படிப்பதை விட தனக்குக் கிடைக்கும் வேலையில் மிகப்பெரிய வாய்ப்பை இருப்பதை உணர்ந்தார். அதனால் தான் வேலைக்கு உடனே சேர்ந்து விட்டார்.

ஒருவேளை அவரது பெற்றோர் ஆசைப்பட்டபடி பிஎச்டி மட்டும் படித்திருந்தால் இப்போது உள்ளபடி பலருக்குத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு செல்ல முடியாதபடி போயிருக்கும் என்பது தான் உண்மை. மேலும் கூகுள் நிறுவனத்தில் மட்டும் வேலைக்குச் சேராமல் போயிருந்தால் தனது வாழ்க்கைப் பயணம் வேறுவிதமாகத் திசை திரும்பியிருக்கும் என்றும் கூறினார் சுந்தர் பிச்சை.

அதேசமயம் இந்தியாவில் நடைமுறை அனுபவத்தைவிடக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய கல்வி சாதனைகளை விட நிஜ உலகின் அனுபவமும் படைப்பாற்றலும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அதேபோல் இந்திய மாணவர்களிடம் சிறந்த திறமை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட முக்கியமான பல விஷயங்களைப் பேசியுள்ளார். அப்போது தான் ஒரே சமயத்தில் தான் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ரகசியத்தைச் சொல்லி ஆச்சரியப்பட வைத்தார். எதற்காக ஒரே சமயத்தில் 20 போன்களை பயன்படுத்துகிறார் என்பது குறித்து தகவலை இப்போது பார்ப்போம்.

ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கான ரகசியம் என்னவென்றால், பணி நிமித்தமாக இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன் என்று கூறினார் சுந்தர் பிச்சை.

நிறைவேறாமல் போன பெற்றோர் ஆசை.. மனம் திறந்த Google CEO சுந்தர் பிச்சை..

இப்படிச் செயல்பட்டால்தான், பொதுமக்கள் விரும்பும் புத்தம் புதிய அம்சங்களைக் கூகுள் நிறுவனத்தால் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார் அவர். அதேபோல் இந்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்தும் சுந்தர் பிச்சை பேசியுள்ளார். அதாவது குழந்தைகள் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதைக் கண்டிக்காமல், கட்டுப்படுத்தும் விதத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை இருக்க வேண்டும்.

குழந்தைகள் எவ்வளவு நேரம் செல்போன் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக் குழந்தைகள் அவர்கள் போக்கில் விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sundar Pichai would have made his parents happy if he had a PhD: But he now the CEO of Google
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X