தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?

|

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மது விற்பனை தமிழக அரசு எப்படி செயல்படுத்த திட்டமிடும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,542 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

108எம்பி கேமராவுடன் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்..!108எம்பி கேமராவுடன் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்..!

குணமடைவோர் சதவீதம் 29.36 ஆக உள்ளது

குணமடைவோர் சதவீதம் 29.36 ஆக உள்ளது

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 29.36 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3390 புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 1273 பேர் குணமடைந்து உள்ளனர். அரசு அறிவுரைகளை பின்பற்றினால், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் நாம் உச்சத்தை எட்டமாட்டோம் என தெரிவிக்கப்படுகிறது.

7 ஆம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக்கை திறந்தது

7 ஆம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக்கை திறந்தது

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக்கை திறந்தது. இதற்கு எதிர்காட்சி தரப்பிலும், பெண்கள் தரப்பில் இருந்தும் பலத்த கண்டனங்கள் வந்தது. அதேபோல் சென்னையில் கொரோனா பரவலையடுத்து அங்கு மட்டும் டாஸ்மாக் திறக்கவில்லை.

மது அருந்தாமல் இருந்த மது பிரியர்கள்

மது அருந்தாமல் இருந்த மது பிரியர்கள்

40 நாட்களாக மது அருந்தாமல் இருந்த மது பிரியர்கள் ஒரே நாளில் ரூ.170 கோடி வசூல் வரும் அளவிற்கு மதுவை வாங்கி குடித்தனர். இந்த நிலையில் மது விற்பனை கொரோனா வைரஸ் பரவுவதை இன்னும் எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் டாஸ்மாக்கை திறந்த இரண்டாவது நாளில் மீண்டும் மூடி விட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்கள்

அதேபோல் 7 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்தேறியது. இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவோடு, டாஸ்மாக் திறந்தபிறகு நிகழ்ந்த குற்றச்சம்வங்களை வீடியோ, புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்பிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகள் பலவற்றிற்கு அனுமதி

அத்தியாவசிய தேவைகள் பலவற்றிற்கு அனுமதி

இதையடுத்து அத்தியாவசிய தேவைகள் பலவற்றிற்கு அனுமதி இல்லாத காரணத்தால், டாஸ்மாக் அனுமதி அளித்தது ஏன் என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றண் உத்தரவிட்டது.

அறிவிப்பால் மதுபிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி

அறிவிப்பால் மதுபிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி

இந்த அறிவிப்பு மதுபிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுநாள் வரை தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை இல்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி, டோக்கன் பெற்றவர்களும் 7-ம் தேதி வரிசையில் நின்று தான் மதுபாட்டில்களை வாங்கினார். ஆன்லைனில் மது விற்பனை செய்வதென்றால், டோர் டெலிவரி செய்வதற்கு ஏற்றபடி ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

உணவு டெலிவரி செயலியான சொமேட்டோ

உணவு டெலிவரி செயலியான சொமேட்டோ

இதற்கிடையே உணவு டெலிவரி செயலியான சொமேட்டோ, இந்த சேவையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை டோர் டெலிவரி செய்தது.

வீட்டில் டெலிவரி செய்ய சொமேட்டோ முன் வந்திருப்பதாக தகவல்

வீட்டில் டெலிவரி செய்ய சொமேட்டோ முன் வந்திருப்பதாக தகவல்

இதற்கிடையே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் மதுவை, வீட்டில் டெலிவரி செய்ய சொமேட்டோ, முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தமிழகத்தில் எப்படி சாத்தியம் ஆகும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்த கொரோனா காலத்தில் தமிழக அரசு ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்ய வைத்தது. ஆனால் தமிழகத்தில் மதுவை வீட்டிற்கு டெலிவரி செய்வதில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளது.

மதுவை எப்படி வீட்டிற்கு டெலிவரி செய்வது

மதுவை எப்படி வீட்டிற்கு டெலிவரி செய்வது

வீட்டில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருக்கும் நேரத்தில் மதுவை எப்படி வீட்டிற்கு டெலிவரி செய்வது. சாமானியர்களுக்கு ஆன்லைன் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில், மது ஆன்லைன் டோர் டெலிவரி என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றே கூறலாம்.

அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்

அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்

மது விற்பனை குறித்த வேறொரு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு காணொளி வாயிலாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து, ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

84ஜிபி டேட்டா: 28நாட்கள் வேலிடிட்டி.! ஜியோவின் தரமான திட்டங்கள்.!84ஜிபி டேட்டா: 28நாட்கள் வேலிடிட்டி.! ஜியோவின் தரமான திட்டங்கள்.!

மதுவை அடியோடு மறக்க அறிய வாய்ப்பு

மதுவை அடியோடு மறக்க அறிய வாய்ப்பு

தமிழக அரசு சொமேட்டோ அல்லது மற்ற டெலிவரி நிறுவனங்களோடு கூட்டு வைத்து டெலிவரி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை ஆரம்பத்திற்கு மது பிரியர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஒரு தீய பழக்கத்தை கைவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பழக்கம் இல்லாமல் வாழலாம். தற்போதய நிலையில் ஏறக்குறைய 40 நாட்கள் மது இல்லாமல் வாழ்ந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மது இல்லாமல் வாழ முயற்சிக்க வேண்டும் என்பது ஏணையோரின் வேண்டுதல்.

News Source: ndtv

Best Mobiles in India

English summary
Tamilnadu Tasmac online booking., is home delivery possible in tn

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X