அப்போ கூகுள் இல்லையா? சுந்தர் பிச்சை தினமும் காலையில் இந்த வெப்சைட் தான் பார்ப்பாராம்.!
கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) தினமும் காலையில் எழுந்த உடன் பார்க்கும் முதல் இணையதளம் ஏதுவாக இருக்கும் என பலருக்கும் கேள்வி இருக்கும். அதற்கு இப்போது தான் விடை கிடைத்துள்ளது. இது குறித்து விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் கூகுள் நிறுவனம் புதிய புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் சுந்தர் பிச்சை. இவர் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார்.

இப்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் சுந்தர் பிச்சை பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுந்தர் பிச்சை தினமும் காலையில் எந்த இணையதளத்திற்குச் செல்கிறார் என்பதைச் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரே சொல்லி இருக்கிறார்.
அதாவது சுந்தர் பிச்சை தினமும் காலையில் எழுந்த உடன் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் செய்தி ஆர்வலர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு சிறப்பு இணையதளத்தைப் படிப்பதாகத் தெரிவித்தார். அந்த இணையதளத்தின் பெயர் Techmeme என்று அமெரிக்கப் பத்திரிகையான வயர்டுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் பிச்சை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Techmeme இணையதளம் என்பது சிஎன்பிசி, தி வெர்ஜ், ப்ளூம்பெர்க் மற்றும் தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கிய பிற ஊடகங்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பச் செய்திகளுக்கான ஒருங்கிணைக்கும் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பல இணையத் தளத்திற்குச் சென்று செய்திகளைப் படிப்பதை தாண்டி ஒரே தளத்தில் அனைத்து முக்கியமான செய்திகளையும் படிக்கும் தளமாக இருக்கிறது இந்த Techmeme.
கடந்த 2005-ம் ஆண்டு கபே என்பவர் இந்த Techmeme தளத்தை நிறுவினார். இந்த இணையதளம் முக்கிய தொழில் வளர்ச்சி குறித்த செய்திகளையும் மற்றும் சுருக்கமான செய்தித் தொகுப்புகளின் மூலம் வாசகர்களுக்கு விரைவாகத் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.
Techmeme இணையதளம் ஆனது பல லட்சம் மக்களுக்கு டெக் துறை செய்திகளுக்கான விருப்பத் தேர்வாக இருக்கிறது. அதேபோல் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா, மெட்டா சிடிஓ ஆண்ட்ரூ போஸ்வொர்த் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எனப் பல மூத்த அதிகாரிகள் Techmeme தளத்தின் வாசகர்களாக உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சையின் ஆடம்பரமான இல்லம் குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளியானது. அதன்படி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் இருக்கும் சுந்தர் பிச்சை இலத்திற்கு லாஸ் அல்டோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இவரது வீடு சுற்றுலாத்தலம் போல் உள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ரம்மியமான காட்சிகள் சூழ அமைந்திருக்கிறது. மேலும் இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு வாங்கினார் சுந்தர் பிச்சை. இதன் இந்திய மதிப்பு 10,215 கோடி ரூபாய் ஆகும்.
இந்த வீட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டதாம். மேலும் இதன் உள் வடிவமைப்பு செலவு மட்டும் ரூ.49 கோடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வீட்டில் ஒரு குளம், ஒரு மது பாதாள அறை, உடற்பயிற்சி கூடம், ஒரு இன்ஃபினிடி குளம், ஒரு ஸ்பா, சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் போன்ற பல்வேறு நவீன மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பல இருக்கின்றன.


Click it and Unblock the Notifications