அப்படி போடு.. ரூ.16,299 போதும்.. வீட்டுக்கு இந்த Projector-ஐ தூக்குங்க.. 200 இன்ச்.. 8GB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி சப்போர்ட் புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அதிநவீன புரொஜெக்டர் ஆனது வைஃபை கனெக்டிவிட்டி, 8 ஜிபி மெமரி, 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
அதாவது தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி சப்போர்ட் புரொஜெக்டர் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல் ரூ.17,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி சப்போர்ட் புரொஜெக்டர் மாடலை ரூ.16299 இருந்தால் வாங்கி விட முடியும். மேலும் இந்த அசத்தலான புரொஜெக்டர் மாடலின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 300 அம்சங்கள் (Portronics Beem 300 Specifications): 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), எல்இடி 250 லுமன்ஸ் ப்ரைட் டிஸ்பிளே அம்சத்துடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 1920X1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் 4300 லுமன்ஸ் எல்இடி லேம்ப் அவுட்புட் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல். எனவே இந்த புரொஜெக்டர் மூலம் தெளிவான வீடியோக்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலில் 50 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே பெரிய டிஸ்பிளே அனுபவம் இதில் கிடைக்கிறது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல் வெளிவந்தது.
குறிப்பாக கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர். மேலும் 10 வாட்ஸ் இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த அதிநவீன புரொஜெக்டர். எனவே இதில் நீங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலில் நெட்ஃபிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன எனவே உங்களுக்கு பிடித்த புதிய திரைப்படங்களை இதில் எளிமையாகப் பார்க்க முடியும். மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது.

எச்டிஎம்ஐ போர்ட், ஏயூஎக்ஸ்(AUX), யூஎஸ்பி (USB) போர்ட் போன்றவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பென்டிரைவ் சப்போர்ட் உள்ளது. இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்கிரீன மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல் உடன் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் பட்ஜெட் விலையில் வாங்க கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications