என்னது.. இந்த Phone-ஆ யூஸ் பண்றீங்க? Sundar Pichai எந்த போனை பயன்படுத்துகிறார் தெரியுமா? அவரே சொன்ன பதில்!
யார் யார் என்னென்ன போன்களை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு பேரார்வம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கூகுள் (Google) போன்ற ஒரு தொழில்நுடப் சாம்பிராஜ்யத்தை கட்டியாளும் சுந்தர் பிச்சை (Sundar Pichai) என்ன போன் பயன்படுத்துகிறார் என்று தெரிந்தால்.. சொல்லவா வேண்டும்?
இதில் ஆர்வம் அடைவதற்கு என்ன இருக்கிறது? கூகுளின் லேட்டஸ்ட் மற்றும் பிளாக்ஷிப் போனாக (Flagship Phone) எந்த மாடல் அறிமுகமானதோ அதைத்தான் சுந்தர் பிச்சை பயன்படுத்துவார். அப்படி பார்க்கும் போது, அவர் பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) மாடலைத்தான் பயன்படுத்துவார் என்று நீங்கள் நினைத்தால்.. அது 50% சரி.. 50% தவறு!

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான (Google CEO) சுந்தர் பிச்சை, மிஸ்டர் வ்யூஸ் தி பாஸ் (Mrwhosetheboss) என்று நன்கு அறியப்படும் யூட்யூபர் ஆன அருண் மைனியுடன் (YouTuber Aun Maini) நடந்த நேர்காணலின் போது தான் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை வெளிப்படுத்தி உள்ளார்.
ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் (Future of smartphones) பற்றிய இந்த நேர்காணலின் போது, கடந்த சில காலமாக பிக்சல் ஃபோல்ட்டை சோதித்து (Testing) வருவதை சுந்தர் பிச்சை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் அது மட்டும் அல்ல. சுந்தர் பிச்சை மேலும் 3 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்.
பிக்சல் ஃபோல்ட் உடன் சேர்த்து ஒரு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு ஐபோனையும் சுந்தர் பிச்சை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார். ஆனால் சுந்தர் பிச்சையின் பிரதான ஸ்மார்ட்போன் (Primary Phone) பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro) தான். அதாவது சுந்தர் பிச்சை பயன்படுத்துவது தனது சொந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போனைத்தான்!
ஆகமொத்தம் சுந்தர் பிச்சைக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் அளவிற்கு நேரங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். "பயணம் செய்யும் போது, மிகவும் பிஸியாக இருக்கும் போது எனக்கு வந்த மின்னஞ்சல்களை (emails) விரைவாக சரிபார்ப்பதற்காக மட்டுமே நான் எனது ஸ்மார்ட்போனை வெளியே எடுப்பேன். நான் மிகவும் இலகுவான ஸ்மார்ட்போனை (Lighter phone) பயன்படுத்த விரும்புகிறேன்" என்று அவரே கூறினார்
"நீங்கள் எந்த போனை பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டபோது. "இப்போதைக்கு பிக்சல் 7 ப்ரோ, ஆனால் நான் சிலவற்றை சோதனையும் செய்கிறேன், சாம்சங் கேலக்ஸியில் (Samsung Galaxy) இருந்து புதிய பிக்சல் ஃபோல்ட்டில் இருந்து ஐபோன் (iPhone) வரை அனைத்தையும் பயன்படுத்துகிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் தனது வெவ்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு வெவ்வேறு சிம் கார்டுகளை (SIM Cards) வைத்திருப்பதையும் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தி உள்ளார். அருண் மைனிக்கு சுந்தர் பிச்சை அளித்த இந்த பேட்டி, யூட்யூப்பில் வைலாகிய வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 2.5 மில்லியன் வியூஸ்களை (Views) கடந்து சென்ற வண்ணம் உள்ளது.
குறிப்பிட்ட வீடியோவின் கமெண்ட் செக்ஷனும் (Comment Section) கூட நிரம்பி வழிகிறது. "சுந்தர் பிச்சை மிகவும் அடக்கமானவர்", "சுந்தர் விஷயங்களை கவனமாகவும் தெளிவாகவும் விளக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நேர்மையானவராகவும் தெரிகிறது!" என்று பலரும் பல வகையான கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








