Xiaomi Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!

|

சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாகப் பல தாமதங்களுக்குப் பிறகு, சியோமி நிறுவனம் இறுதியாக இந்த ஸ்மார்ட்போன் உடன் Mi பாக்ஸ் மற்றும் Mi ட்ரு வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 சாதனத்தை ஆன்லைன் நிகழ்வு மூலம் இன்று அறிமுகம் செய்கிறது. நீங்கள் இந்த நிகழ்ச்சியை நேரலை காணக் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

Mi 10 ஸ்மார்ட்போன் உடன் இதுவும் இன்று இந்தியாவில் அறிமுகம்

Mi 10 ஸ்மார்ட்போன் உடன் இதுவும் இன்று இந்தியாவில் அறிமுகம்

சியோமி Mi 10 ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் கேமரா அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துடன் Mi பாக்ஸ் மற்றும் Mi ட்ரு வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 உடன் இணைந்து மி 10 அறிமுகப்படுத்தும். சியோமியின் மி 10 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து இன்னும் சில உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தைக்குள் கால் பதிக்கிறது.

Mi 10 வெளியீட்டு நிகழ்வு நிகழ்ச்சி நேரலையை எங்கு பார்க்கலாம்

Mi 10 வெளியீட்டு நிகழ்வு நிகழ்ச்சி நேரலையை எங்கு பார்க்கலாம்

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் 108 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ஆகியவை அடங்கும். இந்த Mi 10 வெளியீட்டு நிகழ்வு நிகழ்ச்சி நேரடி ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த Mi 10 வெளியீட்டு நிகழ்வு இன்று மதியம் 12 மணி அளவில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் நேரலையை YouTube, Mi.com, Mi சமூக பக்கங்கள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் காணலாம்.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள Mi 10

அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள Mi 10

சியோமி நிறுவனம் Mi 10 உடன், சியோமி Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 மற்றும் Mi பாக்ஸின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது . Mi 10 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது. சியோமி நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Mi 10 முன்பதிவு செய்தால் 'இது' இலவசம்

Mi 10 முன்பதிவு செய்தால் 'இது' இலவசம்

மேலும் இதன் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று மதியம் 2 மணி முதல் தொடங்கி மே 17 வரை நடைபெறும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Mi 10 ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,499 மதிப்புள்ள பவர் பேங்க் இலவசமாக வழங்கப்படும்.

இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

இந்திய விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்

இந்திய விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்

இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் சீனாவை விட வித்தியாசமாகக் கணக்கிடப்படும் என்று சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் முன்னர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நேரடி இறக்குமதி, சமீபத்திய ஜிஎஸ்டி உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைத்தல் போன்ற காரணிகளால் Mi 10 ஸ்மார்ட்போனின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

அறிமுக நிகழ்ச்சியின் நேரலை

Mi 10 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விலையை வைத்துப் பார்க்கையில் தோராயமாக ரூ.42,800 என்ற ஆரம்ப விலையுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த Mi 10 ஸ்மார்ட்போனின் அறிமுகநிகழ்ச்சியின் நேரலையைநீங்கள் இங்கே பார்க்கலாம்.

Mi 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Mi 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 6.67' இன்ச் கொண்ட முழு எச்.டி பிளஸ் அமோலேட் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய MIUI 11 இயங்குதளம்
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
  • 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான உள்ளடக்க ஸ்டோரேஜ்
  • ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?

    குவாட் கேமரா அமைப்பு - 4 பின்புற கேமராக்கள்

    குவாட் கேமரா அமைப்பு - 4 பின்புற கேமராக்கள்

    • 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 13 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
    • 2 மெகா பிக்சல் கேமரா
    • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
    • 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமரா
    • 30W வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
    • 4,780 எம்.ஏ.எச். பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10 Mi Box Mi True Wireless Earphones 2 To Launch In India Watch Live Here : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X