கண்கலங்கி நின்ற சுந்தர் பிச்சையின் தந்தை! காரணம் இந்த சென்னை வீடு தான்.! ஏன் என்னாச்சு?
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ம் ஆண்டு இணைந்தார் சுந்தர் பிச்சை. இவர் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுந்தர் பிச்சை தான் வளர்ந்து வந்த வீட்டை விற்பனை செய்துவிட்டதாகவும், வீட்டை விற்பனை செய்தபோது சுந்தர் பிச்சையின் தந்தை கண் கலங்கியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர். குறிப்பாக ரெகுநாத பிச்சை,லக்ஷ்மி தம்பதியினருக்குப் பிறந்த சுந்தர் பிச்சை, சென்னையில்தான் வளர்ந்தார்.

அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் சுந்தர் பிச்சை வளர்ந்து வந்த வீட்டை தற்போது விற்பனை செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அசோக் நகர் வீடு சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த வீட்டில் சுந்தர் பிச்சை வசித்தபோது பள்ளி படிப்பை முடித்துள்ளார்.
அதன்பின்பு கரக்பூர் ஐஐடியில் படித்து படிப்படியாகக் கூகுள் தலைமை பதவி வரை சென்றுவிட்டார். குறிப்பாக அசோக் நகர் வீட்டை விற்பனை செய்துவிடலாம் என ரெகுநாத பிச்சை முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்த தகவல் தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கும் சி மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுந்தர் பிச்சை வசித்த வீடு என்பதால் அதை வாங்குவதற்கு மணிகண்டன் முடிவு செய்துள்ளார். ஆனால் ரெகுநாத பிச்சை அமெரிக்காவில் இருந்ததால் வீட்டை வாங்குவதற்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகியுள்ளது. பின்பு வீட்டை வாங்கியபின் சொத்து ஆவணங்கள் ரெகுநாத பிச்சை மணிகண்டனிடம் ஒப்படைத்தபோது ரெகுநாத பிச்சை கண் கலங்கியதாக ஒரு தனியார் ஊடகத்திடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இருவரும் முதல் முறை சந்தித்தபோதே சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனுக்கு சுந்தர் பிச்சையின் தாயார் ஃபில்டர் காபியும் போட்டு கொடுத்திருக்கிறார். குறிப்பாக சுந்தர் பிச்சையின் தந்தை என அலட்டிக்கொள்ளாமல் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து எல்லா வரிகளையும் செலுத்திவிட்டு சொத்துக்கான ஆவணங்களை ரெகுநாத பிச்சை தன்னிடம் ஒப்படைத்ததாக மணிகண்டன் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்பதற்காக ரெகுநாத பிச்சை தன் மகனின் பெயரை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை என்று மணிகண்டன் கூறியுள்ளார். அதேபோல் சமீபத்தில் சுந்தர் பிச்சையின் ஆடம்பரமான இல்லம் குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளிவந்தது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி,அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் இருக்கும் சுந்தர் பிச்சை இலத்திற்கு லாஸ் அல்டோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இவரது வீடு சுற்றுலாத்தலம் போல் உள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ரம்மியமான காட்சிகள் சூழ அமைந்திருக்கிறது. மேலும் இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு வாங்கினார் சுந்தர் பிச்சை. இதன் இந்திய மதிப்பு 10,215 கோடி ரூபாய் ஆகும்.

இந்த வீட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டதாம். மேலும் இதன் உள்ளவடிவமைப்பு செலவு மட்டும் ரூ.49 கோடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வீட்டில் ஒரு குளம், ஒரு மது பாதாள அறை, உடற்பயிற்சி கூடம், ஒரு இன்ஃபினிடி குளம், ஒரு ஸ்பா, சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் போன்ற பல்வேறு நவீன மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பல இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








