Home
Mobile

சுந்தர் சார்.. சரியான ஆள் நீங்க.. மறைச்சு வச்சி Google பார்த்த வேலை.. 20 நாட்கள் கழிச்சு வெளிவந்த உண்மை!

கடுகளவும் வெளியே கசியக்கூடாத வியாபார தந்திரங்களை உருவாக்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் யாரெல்லாம் கில்லாடிகளாக இருக்கிறார்களோ.. அவர்களெல்லாம் எப்போதுமே 'நம்பர் 1' ஆகத்தான் இருப்பார்கள். அந்த பட்டியலில், கூகுளுக்கும், சுந்தர் பிச்சைக்கும் (Sundar Pichai) நிரந்தரமான இடங்கள் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதற்கிடையில், ஒரு சின்ன லீக் தகவலில் (Leaked Information) கூட சிக்காமல் கூகுள் நிறுவனம் ரகசியமாக செய்து வந்த ஒரு வேலை குறித்த தகவல் வெளியாகி.. "டேய்..எப்புட்றா உங்களால மட்டும் இதெல்லாம் பண்ண முடியுது?" என்று பல மொபைல் நிறுவனங்களையும் புலம்ப வைத்துள்ளது.

சுந்தர் சார்.. சரியான ஆள் நீங்க.. மறைச்சு வச்சி Google பார்த்த வேலை!

விஷயம் என்னவென்றால்.. கடந்த மே 10 ஆம் தேதி அன்று கூகுள் (Google) நிறுவனத்தின் வருடாந்திர டெவெலப்பர் மாநாடு (Annual Developer Conference) நடந்தது அல்லவா.. அதாவது கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வு (Google I/O 2023 Event) நடந்தது அல்லவா?

அந்நிகழ்வில் கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போனாக (Google First Foldable Phone) பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) அறிமுகமானது அல்லவா? இந்த இடத்தில் தான் "நம்ம கூகுள் ஆண்டவர்" ஒரு சீக்ரெட் ஆன வேலையை "பார்த்துள்ளார்". அந்த உண்மை, பிக்சல் ஃபோல்ட் அறிமுகமாகி 20 நாட்கள் கழித்து தற்போது வெளிவந்துள்ளது.

பிக்சல் போல்ட் உடன் சேர்த்து இன்னொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனும் உருவாக்கப்பட்டதாம், ஆனால் அந்த போன் "அவ்வளவு சிறப்பாக இல்லை" என்கிற காரணத்தினால் அதன் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்ததாக ஐவி ரோஸ் (Ivy Ross) கூறியுள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான வடிவமைப்பு தலைவர் (Head of design for hardware products) ஆவார்.

மேலும் "ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் இதே மாதிரியான மாடல்களை விட சிறப்பாக செயல்படும் வரை கூகுளின் இரண்டாவது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்பட மாட்டாது" என்றும் ஐவி ரோஸ் கூறியுள்ளார். இவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது கூகுளின் இரண்டாவது ஃபோல்டபிள் போன் ஆனது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip) போன்ற வடிவமைப்பை "காப்பி" அடித்து இருக்கலாம்.

அதாவது கிளாம்ஷெல் ஃபிளிப்பபிள் (Clamshell Flippable) வடிவமைப்புடன் தயார் செய்யப்பட்டு இருக்கலாம். ஒருவேளை ஐ/ஓ 2023 நிகழ்வின் போது பிக்சல் ஃபோல்ட் உடன் சேர்ந்து கூகுளின் இரண்டாவது ஃபோல்டபிள் போனும் அறிமுகமாகி இருந்தால்.. அது விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கலாம். அதனால் தான் என்னவோ கூகுள் அதை அறிமுகம் செய்யவில்லை.

எல்லாவற்றை விடவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கூகுளின் இரண்டாவது ஃபோல்டபிள் போன் பற்றி கடுகளவு கூட தகவல் லீக் ஆகவில்லை. ஒரு சமீபத்திய பேட்டியொன்றில், தான் கூகுள் பிக்சல் ஃபோல்டடை சோதனை செய்ததாக சுந்தர் பிச்சை கூறி இருந்தார். அப்போது கூட இரண்டாவது ஃபோல்டபிள் போன் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை!

கூகுளின் இரண்டாவது ஃபோல்டபிள் போன் ஆனது சந்தையில் இருக்கும் மற்ற மாடல்களை மிஞ்சும் அளவுக்கு போதுமான அம்சங்களை எப்போது பெறுகிறதோ.. அப்போது கண்டிப்பாக அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இனிமேலாவது இந்த ஸ்மார்ட்போன் குறித்த லீக்ஸ் தகவல்கள் வெளியாகும் என்று நம்புவோம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Was Silently Worked on Second Foldable Phone Alongside Pixel Fold But Not Launched it Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X