Home
News

ஸ்கெட்ச் மார்க்-க்கு இல்ல.. சுந்தர்-க்கு.. கேப்புல நடந்த கிடா வெட்டு.. Elon Musk ஆரம்பித்த புது கம்பெனி!

தனது ட்விட்டர் (Twitter) நிறுவனத்திற்கு எதிராக த்ரெட்ஸ் (Threads) என்கிற ஆப்பை அறிமுகம் செய்த மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மீது எலான் மஸ்க் (Elon Musk) எவவ்ளவு கடுப்பில் உள்ளார்? அதற்கு எதிராக அவர் என்னென்ன செய்து வருகிறார்? என்பதெல்லாம் நேற்று இரவோடு பழைய கதைகளாகி விட்டன.

ஏனென்றால் நேற்று "இரவோடு இரவாக" எலான் மஸ்க், ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . இந்நிறுவனம் த்ரெட்ஸ் ஆப்பிற்கு எதிரானது; மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சரியான பதிலடி கொடுக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு! எலான் மஸ்க்கின் இந்த புதிய நிறுவனம் சுந்தர் பிச்சைக்கான (Sundar Pichai) ஸ்கெட்ச் ஆகும்!

கேப்புல நடந்த கிடா வெட்டு.. Elon Musk ஆரம்பித்த புது கம்பெனி!

ஏனென்றால், எலான் மஸ்க் தொடங்கியுள்ளது ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான ஒரு நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் பெயர் எக்ஸ்ஏஐ (xAI) ஆகும். அதாவது இது கூகுள் சிஇஓ-வான சுந்தர் பிச்சை மட்டுமல்ல, ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக வேலை செய்யும் எல்லா நிறுவனங்களின் தலைவர்களுக்குமான ஒரு ஸ்கெட்ச் ஆகும்!

அதாவது கூகுளின் ஏஐ சாட்பாட் ஆன பார்ட் (AI ChatBot Bard) மட்டுமின்றி, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் ஏஐ (Bing AI) உட்பட உலகின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள ஏஐ தொழில்நுட்பங்களுக்கு எக்ஸ்ஏஐ நிறுவனம் கண்டிப்பாக ஒரு பெரிய மண்டை குடைச்சலாக இருக்கும்!

எலான் மஸ்க் தான் உருவாக்கிய புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஒரு ட்வீட் வழியாக (நேற்று இரவு) உறுதிப்படுத்தினார். அதில் அவர் "உண்மையைப் புரிந்துகொள்வதற்காக" (Understand reality) புதிய நிறுவனத்தை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதிய நிறுவனத்தின் பணி என்ன? இதன் கீழ் யாரெல்லாம் வேலை செய்வார்கள் என்பதை விளக்கும் வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வலைத்தளத்தின்படி, எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் "பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வது" ஆகும். மேலும் எக்ஸ்ஏஐ நிறுவனமானது டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சிஇஒ-வான எலான் மஸ்க் தலைமையின் கீழே செயல்படும்.

இன்னுமொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் "அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்" என்கிற பாணியில், டீப் மைண்ட் (DeepMind) ஓப்பன்ஏஐ (OpenAI), கூகுள் ரிசர்ச் (Google Research) மற்றும் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச்சின் (Microsoft Research) முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்காது இகோர் பாபுஷ்கின், மானுவல் க்ரோயிஸ், யுஹுவாய் (டோனி) வு, கிறிஸ்டியன் செகெடி, ஜிம்மி பா, டோபி போலன், ராஸ் நோர்டீன், கைல் கோசிக், கிரெக் யாங், குடோங் ஜாங் மற்றும் ஜிஹாங் டாய் ஆகியோர் ஏஎக்ஸ்ஏஐ குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

தி வெர்ஜ்ஜின் சமீபத்திய அறிக்கையின்படி, எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் ஏஐ பாதுகாப்பு மையத்தை மேற்பார்வையிடும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டான் ஹென்ட்ரிக்ஸின் கூற்றுப்படி, எலான் மஸ்க்கின் இந்த புதிய நிறுவனமானது "ஏஐ உடன் தொடர்புடைய சமூக அளவிலான அபாயங்களை குறைக்க முயலும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்".

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Started New Artificial Intelligence Company xAI with OpenAI Google Microsoft Researchers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X