வாய்ப்ப மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவிங்க: சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி வாங்க சரியான நேரம்!

|

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது தற்போது தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த மிட் ரேஞ்ச் சாதனத்துக்கு ரூ.9000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.30,000 விலையில் அறிவிக்கப்பட்ட இந்த சாதனத்துக்கு வாடிக்கையாளர்கள் முன்னதாகவே அமோக வரவேற்பு இருந்தது. தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் இந்த சாதனம் ரூ.20,999 என விற்பனைக்கு கிடைக்கிறது. சலுகைகளுடன் இந்த சாதனத்தை எப்படி வாங்குவது என பார்க்கலாம்.

Samsung Galaxy M52 5G: சலுகை விவரங்கள்

Samsung Galaxy M52 5G: சலுகை விவரங்கள்

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் ரூ.20,999 என கிடைக்கிறது. தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,485 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பகத்துடன் கூடிய வேரியண்ட் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் ரூ.24,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பெறுவதை விட ரூ.4000 குறைவாகவும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. கூடுதலாக வங்கிச் சலுகைகளும் இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனடி தள்ளுபடி அறிவிப்பு

உடனடி தள்ளுபடி அறிவிப்பு

சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் இந்த சாதனம் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார்டு மூலம் சாதனம் வாங்கும் போது ரூ.20,000 என்ற விலைப் பிரிவில் வாங்கலாம். இந்த வங்கிச் சலுகை ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு இது சரியான நேரமாகும்.

ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் கிடைக்கிறது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

வேற லெவல் கேமரா ஆதரவுகள்

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதியுடன் உள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும்; வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் என பல ஆதரவுகளை கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

இந்த கேலக்ஸி எம்52 5ஜி சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிங்கிள் சார்ஜில் 48 மணிநேர டால்க் டைம் அல்லது 20 மணிநேர வீடியோ பிளேபேக் கிடைக்கும். குறிப்பாகஇந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M52 5G Gets Huge Discount in India: Right time to Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X