ரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்

By Siva
|

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் மாடலுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தி வந்தவுடன் கூடவே ரெட் ஐபோன் 7 மற்றும் ரெட் ஐபோன் 7பிளஸ் ஆகிய மாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்ற சோக செய்தியும் வெளிவந்துள்ளது

ரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த மாடல்களில் ஒன்று சிகப்பு வண்ண ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் என்பது தெரிந்ததே. பின்னர் இந்த இரு மாடல்களும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ரெட் ஐபோன் மற்றும் ஆப்பிள் ஐபோன் இணைந்து வெளியிட்ட இந்த மாடல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி உலகம் முழுவதிலும் உள்ள எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது. மேலும் லாபத்தின் ஒரு பகுதி ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கும் அளிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ரெட் ஐபோன் 7 மற்றும் ரெட் ஐபோன் 7பிளஸ் ஆகிய மாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த மாடல்கள் ஆப்பிள் ஷோரூமில் விற்பனை செய்யப்படாது.

ஆனாலும் இந்த மாடல்கள் இன்னும் சில காலத்திற்கு அமேசான் மற்றும் பெஸ்ட்பை ஆகிய இணையதளங்களின் மூலம் விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது அவர்களிடம் ஸ்டாக் உள்ளவரை இந்த விற்பனையை அவர்கள் தொடர்வார்கள். ஆனால் அவர்களால் இந்த மாடலை புதியதாக கொள்முதல் செய்ய முடியாது

ஆனாலும் ஆப்பிள் நிறுவனம் ரெட் மாடலுக்கு முந்தைய மாடலாக ஐபோன்களான கோல்ட், சில்வர், ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட் மற்றும் மெட்டி பிளாக் ஆகிய நிறங்களின் ஐபோன்களை தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய ஆப்ஸ்; 4.2 மில்லியன் முறை டவுன்லோட்ஸ் செய்யப்பட்டுள்ளது.!இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய ஆப்ஸ்; 4.2 மில்லியன் முறை டவுன்லோட்ஸ் செய்யப்பட்டுள்ளது.!

விற்பனை நிறுத்தப்பட்ட இந்த ரெட் ஐபோன் 256 GB திறன் கொண்ட ஒரு டுயோ ஸ்மார்ட்போன் ஆகும். ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கும் ஐபோன்களின் திறன் 32 GB மற்றும் 128GB உள்ள ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் மாடல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Apple has discontinued the Red color variant of the iPhone 7 and 7 Plus and the same will no more be listed for sale.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X