4ஜி தனிச்சிறப்பு கொண்ட நோக்கியா ஃபோன் விரைவில் அறிமுகம்?

|

ஒரு புதிய 4ஜி தனிச்சிறப்பு கொண்ட நோக்கியா ஃபோனை விரைவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், டிஏ-1047 மற்றும் டிஏ-1060 என்ற மாடல் எண்களைக் கொண்ட ஒரு நோக்கியா பிராண்டு மொஃபைல், அமெரிக்காவின் எஃப்சிசி சான்றிதழைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

4ஜி தனிச்சிறப்பு கொண்ட நோக்கியா ஃபோன் விரைவில் அறிமுகம்?

இவை அடுத்து வரவுள்ள நோக்கியா 4ஜி தனிச்சிறப்பு கொண்ட ஃபோன் வகைகள் என்று நம்பப்படுகிறது. இது குறித்து எஃப்சிசி பட்டியல் தரப்பில், இது ஒரு ஸ்மார்ட்போன் அல்ல, ஒரு தனிச்சிறப்பான ஃபோன் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. எஃப்சிசியின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, இந்த ஃபோனுக்கு ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழும் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, அதன் அறிமுகம் மிக விரைவில் நடைபெறலாம் என்பது தெரிய வருகிறது.

நோக்கியாமொஃப் வழியாக ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழில், டிஏ-1047, டிஏ-1060, டிஏ-1056, டிஏ-1079 மற்றும் டிஏ-1066 உள்ளிட்ட 5 மாடல் எண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதிலிருந்து நோக்கியா 4ஜி தனிச்சிறப்பு கொண்ட 5 ஃபோன் வகைகள் தயாரிப்பில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்த வகைகள் பலவிதமான சந்தைகளுக்கு உரியது என்பது உண்மையே. எனினும், இந்த ஃபோனின் ஒற்றை மற்றும் இரட்டை சிம் வகைகள், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஃபோனின் இரட்டை சிம் பதிப்பை, ஆசியா மற்றும் ஐரோப்பியா சந்தைகள் பெற வாய்ப்புள்ளது. உலகின் மற்ற பகுதிகள், நோக்கியா தனிச்சிறப்பு போனின் ஒற்றை சிம் வகையை மட்டுமே பெற உள்ளன.

6ஜிபி ரேம் & 5.98-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தும் இன்பினிக்ஸ் ஸீரோ 5.!6ஜிபி ரேம் & 5.98-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தும் இன்பினிக்ஸ் ஸீரோ 5.!

சாஃப்வேர் பொறுத்த வரை, இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு மூலம் இயங்காமல், நோக்கியா 3310 (2017) போன்ற 30க்கும் மேற்பட்ட அம்சங்களில் அமைந்த ஓஎஸ் மூலம் இயங்கலாம் என்று விளக்கத்தின் மூலம் தெரியவருகிறது.

நோக்கியா 4ஜி தனிச்சிறப்பு ஃபோன் குறித்த எஃப்சிசி பட்டியலில், இந்த ஃபோனின் அளவுகள் 133 x 68 என்ற அளவில் அமைந்திருக்கும் என்றும், நோக்கியா ஈ72க்கு ஒத்தற்போல வேர்டி கீபோர்டை கொண்டிருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

தனது அடுத்த வரவுள்ள ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை முன்னிட்டு, ஏற்கனவே ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வதந்திகளின் புயலில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே எஃப்சிசி மற்றும் கிக்பென்ஞ் தரவுத்தளங்களின் மூலம் கண்டறியப்பட்ட நோக்கியா 9 முன்னணி ஸ்மார்ட்போனை, இந்நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என்றும், நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை பதிப்பானது, வரும் ஜனவரி 19 இல் வெளியிடலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இவற்றின் வெளியிடுகளுக்கு இடையே, இந்நிறுவனம் 4ஜி தனிச்சிறப்பு ஃபோனின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேற்கூறிய இந்த எல்லா கைப்பேசிகளின் வெளியிடுகளும், 2018 இன் முதற்காலாண்டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
The 4G Nokia feature phone is likely to be launched soon as it receives the Bluetooth SIG certification. It was only a few days back that this feature phone cleared the FCC certification. The device is expected to be launched in both single and dual SIM variants based on the different markets.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X