எனக்கு எண்டே கிடையாது.. கம்மி விலையில் வருகிறது புதிய Nokia போன்.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் எச்எம்டி எனும் பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு முன்பு இந்நிறுவனம் நோக்கியா பெயரில் புதிய பீச்சர் போனை அறிமுகம் செய்ய உள்ளதாக டீசர் வெளியிட்டுள்ளது.
அதாவது எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் 8-பிட் வெர்ஷனை காண்பிக்கும் படம் உள்ளது. எனவே ஒரு கிளாசிக் நோக்கியா போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, நோக்கியா 3310 (Nokia 3310) எனும் மாடலை தான் இந்நிறுவனம் கம்மி விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா போன் ஆனது மஞ்சள் நிறத்தில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. தற்போது வரை புதிய பீச்சர் போனின் அம்சங்களை வெளியிடவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் தெரியவரும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 2660 பிளிப் அம்சங்கள் (Nokia 2660 flip specifications): 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. இரண்டு டிஸ்பிளே வசதி இருப்பதால் இந்த பீச்சர் போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த நோக்கியா 2660 பிளிப் மாடலில் எமர்ஜென்சி பட்டன் (emergency button) ஆதரவு உள்ளது. இது எதற்கு என்றால், அவசரக்காலத்தில் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ளமுடியும். குறிப்பாக அவசரக்காலத்தில் தொடர்புகொள்வதற்காக 5 போன் எண்களை சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிசாக் டி107 (Unisoc T107)பிராசஸர் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா 2660 பிளிப் மாடல். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் Series 30+ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பீச்சர் போன். இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமரா உடன் இந்த நோக்கியா பிளிப் போன் வெளிவந்துள்ளது. 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா 2660 பிளிப் போன்.

1450 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் நோக்கியா 2660 பிளிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 4ஜி வோல்ட்இ ஆதரவு இதில் உள்ளது. ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்கள் இதில் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக எஃப் ரேடியோ வசதி, எம்பி3 பிளேயர், புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த புதிய பீச்சர் போனில் உள்ளது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த நோக்கியா 2660 பிளிப் மாடலை ரூ.4,739 விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








