ஆளுக்கு 1 ஆர்டர்.. 2 டிஸ்பிளே.. UPI.. 32ஜிபி மெமரி.. ஆஃபரில் Nokia போன்.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் கூடிய விரைவில் நோக்கியா மற்றும் எச்டிஎம் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2260 பிளிப் 4ஜி போனுக்கு அமேசானில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் இந்த நோக்கியா 2260 பிளிப் 4ஜி போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் ரூ.4,399 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.3549 இருந்தால் போதும் இந்த அசத்தலான நோக்கியா 2260 பிளிப் 4ஜி போனை வாங்கிவிட முடியும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா 2660 பிளிப் அம்சங்கள் ( Nokia 2660 Flip 4G Specifications): 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 2660 பிளிப் போனுக்கு யுபிஐ ஸ்கேன் (UPI Scan) மற்றும் பே (Pay) பே செயல்பாடுகளைச் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் இருக்கும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் பயனர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Series 30+இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 2660 பிளிப் போன் வெளிவந்துள்ளது. மேலும் யுனிசாக் டி107 (Unisoc T107) பிராசஸர் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
இந்த போனில் எமர்ஜென்சி பட்டன் (emergency button) உள்ளது. இதன் மூலம் அவசரக்காலத்தில் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ளமுடியும். குறிப்பாக அவசரக்காலத்தில் தொடர்புகொள்வதற்காக 5 போன் எண்களைச் சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0.3எம்பி கேமரா உடன் நோக்கியா 2660 பிளிப் போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த நோக்கியா 2660 பிளிப் போனில் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

1450 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த நோக்கியா 2660 பிளிப் போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போன் VoLTE ஆதரவுடன் டூயல் 4G கனெக்ஷனை வழங்கும். ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்கள் இதில் உள்ளன.
எஃப் ரேடியோ, எம்பி3 பிளேயர்,புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








