Home
News

அதிரவிட்ட நோக்கியா.. ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் எச்எம்டி எனும் பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதே எச்எம்டி குளோபல் நிறுவனம் தான் நோக்கியா போன்களையும் தயாரித்து விற்பனை செய்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் பெயரில் மட்டும் தான் மாற்றம் இருக்கும். மற்றபடி அதே சிறந்த பாதுகாப்பு வசதி, தரமான மென்பொருள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் எச்எம்டி குளோபல் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது நோக்கியா சி32 போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதிரவிட்ட நோக்கியா.. ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

கடந்த ஆண்டு மே மாதம் ரூ.8,999 விலையில் நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.6,999 விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா சி32 அம்சங்கள் (Nokia C32 specifications): 4ஜிபி ரேம் (3ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6.5-இன்ச் எசிடி பிளஸ் டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக சிறந்த திரை அனுபவம் வழங்கும் இந்த போனின் டிஸ்பிளே.

1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் மாடல். இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதிரவிட்ட நோக்கியா.. ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன்.

ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டுள்ளது இந்த போன். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகள் இதில் உள்ளது. சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia C32 smartphone price slashed in India: check new price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X