Home
Mobile

மார்க்கெட்டே சும்மா அதிருது.. மூன்று நோக்கியா போன்கள் அறிமுகம்.. எந்தெந்த மாடல்? என்ன விலை?

எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி எனும் பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனாலும் இந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை.

அதாவது தொடர்ந்து நோக்கியா பீச்சர் போன்கள் மற்றும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் மீண்டும் நோக்கியா பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது நோக்கியா 6310 (2024), நோக்கியா 5310 (2024), நோக்கியா 230 (2024) ஆகிய மூன்று போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நோக்கியா போன்கள் அறிமுகம்.. எந்தெந்த மாடல்?

குறிப்பாக இந்த மூன்று போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய நோக்கியா போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நோக்கியா 6310 (2024) அம்சங்கள் (Nokia 6310 specifications): 1450எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா 6310 (2024) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான பீச்சர் போன். குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்கவே இருக்காது.

அதேபோல் நோக்கியா 6310 (2024) பின்புறம் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட விஜிஏ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 2.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ் கார்டு ஸ்லாட் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த அசத்தலான நோக்கியா 6310 (2024) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று நோக்கியா போன்கள் அறிமுகம்.. எந்தெந்த மாடல்?

நோக்கியா 5310 (2024) அம்சங்கள் (Nokia 5310 specifications): யுனிசாக் 6531எப் (Unisoc 6531F) சிப்செட் வசதியுடன் இந்த நோக்கியா 5310 (2024) போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் உயரமாகவும் அகலமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா போன்.

நோக்கியா 5310 (2024) மாடலில் 1450எம்ஏஎசச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் எப்எம் ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா 5310 (2024) மாடல்.

மூன்று நோக்கியா போன்கள் அறிமுகம்.. எந்தெந்த மாடல்?

நோக்கியா 230 (2024) அம்சங்கள் (Nokia 230 specifications): எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 2எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா 230 (2024) மாடல். அதேபோல் இந்த போனுக்கு 2எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2.8-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா 230 (2024) மாடல்.

குறிப்பாக யுனிசாக் 6531எப் (Unisoc 6531F) சிப்செட் உடன் இந்த பீச்சர் போன் வெளிவந்துள்ளது. மேலும் 1450எம்ஏஎச் பேட்டரி, யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா 230 (2024) மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த மூன்று புதிய பீச்சர் போன்களும் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை எச்எம்டி குளோபல் நிறுவனம். ஆனாலும் இந்த போன்கள் விரைவில் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 6310, Nokia 5310 and Nokia 230 feature phones launched: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X