தூக்கிட்டாங்க.. தூக்கிட்டாங்க.. Nokia பெயரை மொத்தமாக நீக்கிய HMD Global.. புது போனுக்காக இத்தனை அளப்பறையா?
திடீரென நோக்கியா (Nokia) பிராண்டை குறிக்கும் இணையதள பக்கம் மற்றும் டிவிட்டர் அல்லது எக்ஸ் (X) வலைத்தள பக்கங்களில் இருந்து நோக்கியா பிராண்டின் பெயர் இப்போது எச்எம்டி குளோபல் (HMD Global) என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நோக்கியா கதை முடிந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக எச்எம்டி குளோபல் திகழ்கிறது. தெரியாதவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து நோக்கியா பிராண்டின் உரிமையை 2016 இல் எச்எம்டி குளோபல் (HMD Global) பத்து ஆண்டுகளுக்கு பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, எச்எம்டி குளோபல் (HMD Global) அதன் சொந்தமான முதல் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் விளைவாக, எச்எம்டி குளோபல் (HMD Global) அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கான விளம்பரங்களை இப்போதே துவங்கிவிட்டது. எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன் குறித்த துணுக்குகளை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட துவங்கியுள்ளது.
எச்எம்டி குளோபல் ஸ்மார்ட்போன் (HMD Global Smartphone):
இதன் முக்கியமான மாற்றமாக, எச்எம்டி குளோபல் (HMD Global) இப்போது நோக்கியாவின் X பக்கத்தின் பெயரை @HMDglobal என்று மாற்றியுள்ளது. அதேபோல், Nokia.com/phones என்ற நோக்கியாவின் அதிகாரபூர்வ இணையத்தள பக்கத்தை இப்போது HMD.com என்று மாற்றியுள்ளது. இத்துடன் எச்எம்டி குளோபல் (HMD Global) புதிய டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஹியூமன் மொபைல் டிவைஸ் (Human Mobile Devices):
இதில், எச்எம்டி (HMD) என்பது ஹியூமன் மொபைல் டிவைஸ் (Human Mobile Devices) என்ற விளக்கத்தை கொண்டுள்ளது என்று டீஸர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், HMD குளோபல் தான் நோக்கியா போன்களின் தயாரிப்பாளர் என்பதை குறிப்பிட்டுள்ளது. இத்துடன் நிறுவனம் விரைவில் HMD Global அதன் புதிய ஸ்மார்ட்போன், பியூச்சர் போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வெளியிடவுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இப்போது வரை HMD குளோபல் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை பற்றி சில விபரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. சமீபத்தில், இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் குறித்த லீக் தகவல்கள் இணையத்தில் பரவியது. இதில் 108MP பிரைமரி கேமராவுடன் OIS அம்சத்தை பெரும் என்பதை லீக் தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரைமரி கேமரா சென்சாரின் தீர்மானம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilization) ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. எச்எம்டி ஸ்மார்ட்போனை சியான் வண்ண (cyan color) விருப்பத்தில் காணப்பட்டுள்ளது. இத்துடன், நிறுவனம் இன்னும் என்னென்ன வண்ணங்களை வழங்கவுள்ளது என்பது மர்மமாக உள்ளது. இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்ற சிறந்த விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.
எப்போது HMD Global ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது?
இருப்பினும், சாதனத்தின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மற்றொரு பிரபலமான டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் வெளியிட்ட தகவலின் படி, HMD பிராண்டட் பல்ஸ் (Pulse), லெஜண்ட் (Legend), பல்ஸ்+ (Pulse+), லெஜண்ட் பிளஸ் (Legend Plus), பல்ஸ் ப்ரோ (Pulse Pro) மற்றும் லெஜண்ட் ப்ரோ (Legend Pro) ஆகிய கோட்நேம்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை கண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதை வைத்து பார்க்கையில், HMD பிராண்ட், 6 புதிய மாடலைகளை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. HMD குளோபல் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இந்த பிப்ரவரி மாதத்தில், பார்சிலோனாவில் நடைபெறவுள்ள MWC 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








