தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் நோக்கியா போன்கள், மற்றும் எச்எம்டி போன்கள், எச்எம்டி டேப்லெட் போன்ற சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் நோக்கியா 3210 4ஜி ( ( Nokia 3210 4G), நோக்கியா 225 4ஜி (Nokia 225 4G), எச்எம்டி பல்ஸ் + (HMD Pulse+), எச்டிம்டி பல்ஸ் + ப்ரோ (HMD Pulse + Pro), எச்டிஎம்டி லெஜண்ட் ((HMD Legend,), எச்எம்டி லெஜண்ட் + (HMD Legend+), எச்எம்டி லெஜண்ட் ப்ரோ (HMD Legend), எச்எம்டி டி21 டேப்லெட்(HMD T21 tablet) ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய போன்கள் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போன்களின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 3210 4ஜி: ஸ்கூபா ப்ளூ, கிரன்ஞ் பிளாக் மற்றும் T2K கோல்டு நிறங்களில் நோக்கியா 3210 4ஜி போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இது 4ஜி பீச்சர் போன் என்று கூறப்படுகிறது. மேலும் யுபிஐ வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 225 4ஜி: இதுவும் ஒரு 4ஜி பீச்சர் போன் ஆகும். குறிப்பாக பிங்க் மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
எச்எம்டி பல்ஸ்+: இந்த எச்எம்டி பல்ஸ்+ ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக மிட்நைட் ப்ளூ நிறத்தில் இந்த எச்எம்டி பல்ஸ் பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும்.
எச்எம்டி பல்ஸ் + ப்ரோ: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் எச்எம்டி பல்ஸ் + ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ட்விலைட் பர்பிள், பிளாக் ஓஷன் மற்றும் கிளேவியர் கிரீன் நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும்.

HMD லெஜண்ட், லெஜண்ட்+ மற்றும் லெஜண்ட் ப்ரோ ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எச்டிம்எ டி21 டேப்லெட் ஆனது பெரிய டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் வாரங்களில் எச்எம்டி நிறுவனம் தனது புதிய போன்கள் மற்றும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யும். பின்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








