Home
Mobile

சிங்கிள் சார்ஜில் 3 நாட்கள் பேட்டரி.. NOKIA-வின் முரட்டு 5G போன் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட் + FREE இயர்பட்ஸ்!

பீச்சர் போன்கள் பிரிவில் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த எல்லா மாடல்களுமே "சும்மா கில்லி" மாதிரி இருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் என்று வந்துவிட்டால்.. விறல் விட்டு எண்ணும் அளவிலான மாடல்கள் மட்டுமே விமர்சகர்கள் மத்தியிலும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அப்படியான மாடல்களில் ஒன்றுதான் - நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். சிங்கிள் சார்ஜில் 3 நாட்கள் வரையிலாக பேட்டரி லைஃப், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பத்தின் கீழ் 11ஜிபி வரையிலான ரேம் உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

NOKIA-வின் முரட்டு 5G போன் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!

மேலும் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே நோக்கியா வயர்டு இயர்பட்ஸ் (Nokia Wired Earbuds) முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சலுகைகளையும் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக அணுக கிடைக்கிறது!

நோக்கியா ஜி42 5ஜி-யின் அசல் விலை VS ஆபர் விலை: அமேசான் இந்தியா வலைத்தளமானது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் மீது 23% நேரடி தள்ளுபடியை வழங்கி.. ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9999 க்கு செய்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் மீது "முழுதாக" ரூ.3000 டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது.

NOKIA-வின் முரட்டு 5G போன் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!

இந்த டிஸ்கவுண்ட், நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் 3 கலர் ஆப்ஷன்களின் (க்ரே, பிங்க் மற்றும் பர்பிள்) மீதும் கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி வங்கியின் டெபிட் கார்டு வழியாக 6 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.500 ரூபாய் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ LCD Display) கொண்டுள்ளது.

NOKIA-வின் முரட்டு 5G போன் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!

ப்ராசஸரை பொறுத்தவரை.. இது 5ஜி-க்கான ஆதரவவை வழங்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டை (Snapdragon 480 Plus Chipset) பேக் செய்கிறது. இது அதிகபட்சமாக 6ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும். இருப்பினும் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வழியாக, இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 11ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை.. இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு (Auto Focus Support) உடனான 50எம்பி மெயின் கேமரா + எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

NOKIA-வின் முரட்டு 5G போன் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!

இந்த கேமரா செட்டப்பில் நைட் மோட் (Night mode), டார்க் விஷன் (Dark Vision), ட்ரைபாட் மோட் (Tripod mode), ஏஐ போர்ட்ரெயிட் (AI portrait), எச்டிஆர் உடனான 50எம்பி மோட் (50MP mode with HDR), பெர்சனலைஸ்டு வாட்டர்மார்க்ஸ் (Personalized watermarks), ஓஸோ 3டி ஆடியோ ரெக்கார்டிங் (OZO 3D Audio recording) போன்ற அம்சங்கள் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை.. இது 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 3 நாட்கள் வரையிலான பிளேபேக் டைம் (Playback Time) கிடைக்கும். கடைசியாக இது பக்கவாட்டில் பிங்கர் ஃபிரிண்ட் சென்சாரையும் (Finger Print Sensor) கொண்டுள்ளது. கூடவே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 Rating) பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Special Offer Price and Free Wired Earbuds 23 Percent Discount on NOKIA G42 5G in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X