அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
அமேசானில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 நாட்கள் பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்பிளே, ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
இந்நிலையில் நோக்கியா சி32 போனுக்கு அமேசானில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த நோக்கியா போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் நோக்கியா சி32 மாடலின் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

நோக்கியா சி32 அம்சங்கள் (Nokia C32 Specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா சி32 போன் வெளிவந்தது. மேலும் 720×1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியுடன் நோக்கியா சி32 போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
7ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மாரட்போன்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாள் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். மேலும் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் நிறங்களில் இந்த நோக்கியா போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








