யாரு விடுவா.. திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் 2 NOKIA போன்கள்.. ரூ.3,500 விலை குறைப்பு.. கூடவே இலவச பட்ஸ்!
நோக்கியா (NOKIA) நிறுவனமானது அமேசான் வலைத்தளம் வழியாக, அதன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்கள் மீது சிறப்பு விற்பனை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மீது.. எந்தெந்த நோக்கியா பீச்சர் போன்கள் மீது.. என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
கலர்ஸ் அண்ட் ஆபர்ஸ் வித் நோக்கியா (Colors and Offers with NOKIA) என்கிற பெயரின்கீழ் அணுக கிடைக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் உடன் இலவச நோக்கியா வயர்டு பட்ஸ் கிடைக்கும் என்றும்.. நோக்கியா பீச்சர் போன்கள் மீது பிரத்யேக சலுகைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் உடன் இலவச பட்ஸ் கிடைக்கும்? அமேசான் வலைத்தளத்தின்படி நோக்கியா ஜி42 5ஜி மற்றும் நோக்கிலான சி32 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் அத்துணை கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உடனும் நோக்கியா வயர்டு பட்ஸ் இலவசமாக கிடைக்கும்.
தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக.. நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நோக்கியா பீச்சர் போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? நோக்கியா ஆல்-நியூ 105 சிங்கிள் சிம் கீபேட் போன் (Nokia All-New 105 Single Sim Keypad Phone) ஆனது ரூ.1599 க்கு பதிலாக ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கிறது. இதே மாடலின் டூயல் சிம் வேரியண்ட் ஆனது ரூ.1,699 க்கு பதிலாக ரூ.1,289 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் நோக்கியா 105 கிளாசிக் (Nokia 105 Classic) மாடலானது ரூ.1249 க்கு பதிலாக ரூ.1,049 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 110 4ஜி (Nokia 110 4G) மாடலானது ரூ.3,299 க்குபதிலாக ரூ.2,249 க்கு வாங்க கிடைக்கிறது. நோக்கியா 106 4ஜி கீபேட் போன் (Nokia 106 4G Keypad Phone) ஆனது ரூ.2999 க்கு பதிலாக ரூ.2,049 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 5310 டூயல் சிம் கீபேட் போன் (Nokia 5310 Dual SIM Keypad Phone) ஆனது ரூ.4,299 க்கு பதிலாக ரூ.3,449 க்கு வாங்க கிடைக்கிறது. நோக்கியா 2660 பிளிப் 4ஜி (Nokia 2660 Flip 4G) மாடலானது ரூ.5,899 க்கு பதிலாக ரூ.4,399 க்கு வாங்க கிடைக்கிறது. நோக்கியா 3310 ரோயல் சிம் பீச்சர் போன் (Nokia 3310 Dual SIM Feature Phone) ஆனது ரூ.4,599 க்கு பதிலாக ரூ.3,699 க்கு வாங்க கிடைக்கிறது.
இது ரூ.12,499 க்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளதா? இந்த ஸ்மார்ட்போன் விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 5ஜி-க்கான ஆதரவவை வழங்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டை பேக் செய்கிறது.
மேலும் இது அதிகபட்சமாக 6ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும். இருப்பினும் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் வழியாக, இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 11ஜிபி ஆக அதிகரிக்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பக்கவாட்டில் பிங்கர் ஃபிரிண்ட் சென்சார் உடன் வரும் நோக்கியா ஜி42 55ஜி ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கும் உள்ளது, கடைசியாக இது 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 3 நாட்கள் வரையிலான பிளேபேக் டைம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








