ஒன்னு இல்ல ஐந்து மாடல்: சந்தையை ஆக்கிரமிக்கும் மோட்டோரோலா- ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்., வேற லெவல் அம்சம்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்றும் நோக்கில் மோட்டோரோலா ஜி சீரிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

மோட்டோரோலா ஜி சீரிஸ்

மோட்டோரோலா ஜி சீரிஸ்

பிரபல ஸ்மார்ட்போன் தயாராப்பாளரான மோட்டோரோலா இந்திய சந்தையில் தனது சந்தையை வலுப்படுத்த தயாராகி வருகிறது. மோட்டோரோலா ஜி சீரிஸ்-ல் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன்பு உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் மோட்டோ ஜி200, மோட்டோ ஜி71, மோட்டோ ஜி51, மோட்டோ ஜி 41 மற்றும் மோட்டோ ஜி31 ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோரோலா நிறுவனம் சிறப்பான மேம்பட்ட அம்சங்களோடு இந்த சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

ஜி தொடரில் வெவ்வேறு சிப்செட்

ஜி தொடரில் வெவ்வேறு சிப்செட்

மோட்டோ ஜி தொடரில் உள்ள மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயின் புதுப்பிப்பு வீதம் 144 ஹெர்ட்ஸ் ஆகும். மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனானது அனைத்து புதிய மாடல்களிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது வெவ்வேறு சிப்செட்கள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி200 ஆனது ஸ்னாப்டிராகன் 888+ செயலி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி71 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி41 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியோடு வருகிறது.

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஜி தொடரின் கீழ் கிடைக்கும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது 450 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.37900 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லத்தீன் அமெரிக்காவில் கிடைக்கிறது. மோட்டோ ஜி71 இந்தியா மதிப்புப்படி தோராயமாக ரூ.25300 ஆக இருக்கிறது. மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.19372 ஆக இருக்கிறது. மோட்டோ ஜி41 சாதனம் இந்திய மதிப்புப்படி ரூ.16900 ஆக இருக்கிறது.

6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது. இது ஸ்பிளாஸ் எதிர்ப்பு வசதிக்கென ஐபி52 மதிப்பீட்டுடன் வருகிறது. மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியோடு வருகிறது. இது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் வாட்டர் எதிர்ப்பு அம்சத்துக்கு என ஐபி52 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி தொடர் ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி தொடர் ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் வசதியோடு வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவுடன் வருகிறது. 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியோடு வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபி52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே 5000 எம்ஏஎச் பேட்டரி பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Going to Launch Five Smartphones under G Series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X