Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், குவாட் பிக்சல் டெக்னாஜி கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர், டர்போபவர் சார்ஜிங் பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) வெளியாகி இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): இந்த மோட்டோவில் அல்ட்ரா பிரீமியாமாக டிஸ்பிளே அம்சங்கள் வருகின்றன. 6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிஓஎல்இடி எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்பிளே (pOLED Endless Edge Display) மாடலாகும்.

பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர் போன்!

எச்டிஆர்10 (HDR10+), 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. மோட்டோரோலாவில் வரும் வழக்கமான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த போனிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT-700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + மேக்ரே ஆப்ஷன் (Macro Option) கொண்ட 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. மேஜிக் எடிட்டர் (Magic Editor), மெஜிக் எரைசர் (Magic Eraser), போட்டோ அன்பிளர் (Photo Unblur) பீச்சர்கள் வருகின்றன.

32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இது குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்டிருக்கிறது. ஆகவே, கேமராவில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடலானது, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர் போன்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் பேக்கப் கொடுக்கும். யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் IP68 ரெசிஸ்டன்ட் வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 5ஜி என்எஸ்ஏ/எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் வருகிறது.

ஹாட் பிங்க் (Hot Pink), மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue), ஸ்லீக் ஃபாரஸ்ட் ப்ளூ (Sleek Forest Blue) ஆகிய 3 கலர்களில் வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனின் விலை ரூ.35,460ஆக இருக்கிறது. இப்போது, குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Fusion With 12GB RAM, 50MP Camera Launch India Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X