Home
Mobile

ஒன்பிளஸ் பக்கமே போக மாட்டீங்க!.. 125W சார்ஜிங்.. 50MP கேமரா.. அறிமுகமானது Motorola போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை, விவரக்குறிப்புகள், விற்பனை தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display)வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 2712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அறிமுகமானது புதிய motorola போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு(Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அறிமுகமானது புதிய motorola போன்.. எந்த மாடல்?

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி படக்கருவியைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா போன்.

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகள் உள்ளன.

அறிமுகமானது புதிய motorola போன்.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மெட்டல் பிரேம் கொண்ட லக்ஸ் லாவெண்டர் (Luxe Lavender) மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty) நிறங்களில் இந்த போன் கிடைக்கும். இதுதவிர மூன் லைட் பேர்ல் ஃபினிஷ் லிமிடெட் எடிஷன் (moonlight pearl limited edition) ஆப்ஷன் கூட உள்ளது

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (68W சார்ஜிங்) போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் (125W சார்ஜிங்) விலை ரூ.35,999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா.இன் தளங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்த போனை வாங்க முடியும். ஆனால் இந்த போனின் மூன் லைட் பேர்ல் ஃபினிஷ் லிமிடெட் எடிஷனை ஏப்ரல் 8-ம் தேதி இரவு 7 மணிக்கு வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro Launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X