Home
Mobile

விஸ்வரூப ஆர்டர்.. ரூ.19,949-க்கு pOLED டிஸ்பிளே.. QUAD கேமரா.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்களே எதிர்பார்க்காத டிஸ்கவுண்ட்டானது, பிஓஎல்இடி டிஸ்பிளே, குவாட் பிக்சல் டெக்னாலஜி கேமரா, 68W டர்போ சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) 5ஜி போனுக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மூக்கில் விரல் வைக்கும்படியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. முதலில் அம்சங்களை பார்த்துவிடுவோம்.

ரூ.19,949-க்கு pOLED டிஸ்பிளே.. QUAD கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த போன்?

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் கிரிஸ்டல் கிளியர் அவுட்டோர் அவுட்புட் கொண்ட 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. அதேபோல 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

கேமராவை பொறுத்தவரையில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமராவானது, குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்டிருக்கிறது.

ரூ.19,949-க்கு pOLED டிஸ்பிளே.. QUAD கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த மோட்டோவில் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. இந்த மோட்டோவானது, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) கொண்டுள்ளது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio), டுயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் பட்ஜெட்டைவிட பிரீமியமாக IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust resistant) கொடுக்கப்பட்டுள்ளது.

7.89 மிமீ தடிமன் மற்றும் 172 கிராம் எடை கொண்ட சிலிகான்/வேகன் லெதர் மாடலும், 7.79 மிமீ தடிமன் மற்றும் 170 கிராம் எடை கொண்ட பிஎம்எம்ஏ/அக்ரிலிக் மாடலும் விற்பனைக்கு வருகிறது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay), சூதிங் சி (Soothing Sea) கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இப்போது, பீச் ஃபஸ் (Peach Fuzz) கலரும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.3,050 தள்ளுபடியும், 12 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.3,150 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, 8 ஜிபி மாடலை ரூ.19,949 பட்ஜெட்டிலும், 12 ஜிபி மாடலை ரூ.21,849 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்ட் மூலம் இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
17 Percent Discount on Motorola Edge 40 Neo With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X