ஹாலுக்கே 2 டிவி வாங்கலாம்.. டிஸ்கவுண்ட்டில் ரூ.14499 போதும்.. 43 இன்ச் மோட்டோ டிவி.. பெசல்-லெஸ் டிஸ்பிளே!
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கூகுள் டிவி ஓஸ், புஎல்எச்டி எல்இடி டிஸ்பிளே, இன்-பில்ட் ஸ்பீக்கர் பாக்ஸ், டால்பி ஆடியோ போன்ற பீச்சர்களை கொண்ட 40 இன்ச் மற்றும் 32 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் மாடல் டிவிகளுக்கு நம்பமுடியாத தள்ளுபடி கிடைக்கிறது.
40 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் டிவி அம்சங்கள் (40 inch MOTOROLA EnvisionX TV Specifications): இந்த மோட்டோ டிவியானது, பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-less Display) கொண்டிருக்கிறது. 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்இடி (LED) பேனல் வருகிறது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள், எச்டிஆர்10 (HDR10), 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது. விவிட், கேமிங், ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட 7 பிக்சர் மோட்கள் (Picture Modes) வருகின்றன. ஆகவே, இந்த டிவியின் டிஸ்பிளே குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் (Crystal Clear Output) கொடுக்கும்.
ஆடியோவை பார்க்கையில், 20W டவுன் ஃபயரிங் (Down Firing) ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி டிஜிட்டல் (Dolby Digital) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் உள்ளது. ஆடியோவிலும் விவிட் (Vivid), ஸ்போர்ட் (Sport), மூவி (Movie), மியூசிக் (Music) போன்ற மோட்கள் வருகின்றன.
குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) சிப்செட் மற்றும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதேபோல கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்தலாம்.
நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime), யூடியூப் (Youtube) போன்ற ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்கிரீன் மிரரிங், வை-பை, ப்ளூடூத் போன்க வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் வருகின்றன. அதேபோல எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, கேமிங் கன்சோல், ஈதர்நெட் போன்ற வயர்டு கனெக்டிவிட்டி அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.15,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1,500 தள்ளுபடி உடன் விற்பனையாகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.
32 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் டிவி அம்சங்கள் (32 inch MOTOROLA EnvisionX TV Specifications): இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. பெசல்லெஸ் டிசைன் கொண்டுள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள், எச்டிஆர்10 சப்போர்ட் கொண்டிருக்கிறது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 20W ஸ்பீக்கர்கள் 2 கொண்டிருக்கிறது. 1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. ஆகவே, ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ப்ளூடூத், வை-பை, ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட் உள்ளது. 3 எச்டிஎம்ஐ மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் இடம் பெற்றுள்ளன.
குவாட் கோர் மீடியாடெக் சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக பில்ட்-இன் கிராபிக்ஸ் யுனிட் வருகிறது. குரோம்காஸ்ட் சப்போர்ட் உள்ளது. இந்த டிவியின் விலை ரூ.10,990ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.1,099 தள்ளுபடி உடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








