தெறிக்க போகும் ஏப்ரல்.. 4,5 இல்ல.. மொத்தம் 19 புது போன்கள் அறிமுகம்! என்னென்ன மாடல்கள்? இதோ FULL லிஸ்ட்!
1 ஆம் தேதி தொடங்கி.. 2024 ஏப்ரல் மாதம் முழுவதும்.. பல்வேறு நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மொத்தம் 19 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதோ முழு லிஸ்ட்:
1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இந்தியாவில் இது ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகமாகும். சீனாவில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) மாடல் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 50எம்பி சோனி லைட்-600 மெயின் கேமரா, 5500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100W சார்ஜிங் ஆதரவு போன்றவைகளை கொண்டிருக்கலாம்.
2. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G): இந்தியாவில் இது ஏப்ரல் 2 ஆம் தேதியன்று மதியம் 12:00 மணிக்கு அறிமுகமாகும். ரூ.12,000க்கு கீழே என்கிற பட்ஜெட்டில் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் FHD+ 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, ஏர் கெஸ்சர்ஸ், 45W சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

3. ஹூவாய் பி70 சீரீஸ் (Huawei P70 Series): இந்த சீரீஸின் கீழ் ஹூராய் பி70 (Huawei P70), ஹூராய் பி70 ப்ரோ (, Huawei P70 Pro), ஹூராய் பி70 ப்ரோ பிளஸ் (Huawei P70 Pro Plus) மற்றும் ஹூராய் பி70 ஆர்ட் (Huawei P70 Art) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும்.
ஹூவாய் பி70 சீரீஸின் கீழ் வரும் அனைத்து மாடல்களுமே ஹைசிலிகான் கிரின் 9000எஸ் (HiSilicon Kirin 9000S) சிப்செட் உடனாக 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும். இந்த 4 ஸ்மார்ட்போன்களுமே வருகிற ஏப்ரல் 2 சீனாவில் நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும். இந்த சீரீஸ் இந்திய சந்தைக்கு வருமா என்பது குறித்து எந்த ஆதிகாரப்பூர்வ தகவலும் இல்லை!

4. மோட்டோரோலா எட்ஜ் 50 சீரீஸ் (Motorola Edge 50 Series): இது ஏப்ரல் 3 ஆம் தேதியன்று அறிமுமாகும். இதன்கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் இருக்கும். இதில் எதெல்லாம், எப்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எட்ஜ் 50 ஃப்யூஷன் FHD+ டிஸ்பிளேவுடன் வரும், அதே சமயம் எட்ஜ் 5 ப்ரோ மற்றும் எட்ஜ் 50 அல்ட்ரா மாடல்கள் 1.5K டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும்; மூன்றுமே OLED பேனல்கள் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டிருக்கும். இருப்பினும் ஃப்யூஷன், ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்கள் ஆனது முறையே ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 மற்றும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் சிப்செட்களை பேக் செய்யும்.

5. ரியல்மி சி65 (Realme C65): இது ஏப்ரல் 4 ஆம் தேதியன்று வியட்நாமில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் வடிவமைப்பு கேலக்ஸி எஸ்22 மாடலை போலவே இருக்கும். இது என்ன விலைக்கு வரும் என்கிற தகவல் இல்லை. இருப்பினும் 5000mAh பேட்டரி, 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் 50எம்பி மெயின் கேமரா போன்றவைகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ (Realme GT Neo 6 SE): இது 2024 ஏப்ரலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். இது 120ஹெர்ட்ஸ் 6.78-இன்ச் 1.5கே (2780 x 1264 பிக்சல்கள்) LTPO OLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 50MP சோனி கேமரா மற்றும் 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.
7. ரெட்மி நோட் 13 டர்போ (Redmi Note 13 Turbo): இது 2024 ஏப்ரல் மாதம் சீனாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது போக்கோ எப்6 (Poco F6) ஆக உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மொபைல் பிளாட்ஃபார்ம், 90W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு, 50எம்பி Sony IMX882 மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.
8. ஐக்யூ இஸட்9 சீரீஸ் (iQOO Z9 Series): இது 2024 ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரீஸின் கீழ் ஐக்யூ இஸட்9 (iQOO Z9), ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x) மற்றும் ஐக்யூ இஸட்9 டர்போ (iQOO Z9 Turbo) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.
ட்ர்போ மாடலில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப் இருக்கும். வெண்ணிலா மற்றும் எக்ஸ் மாடல்களில் முறையே ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்கள் இருக்கும் இடம்பெறும். பிரீமியம் மாடலான டர்போவில் 1.5K பிளாட் OLED டிஸ்பிளே மற்றும் 6,000mAh பேட்டரி இடம்பெற வாய்ப்புள்ளது!
9. சாம்சங் கேலக்ஸி எம்15 (Samsung Galaxy M15) மற்றும் கேலக்ஸி எம்55 (Galaxy M55): இவ்விரு மாடல்களும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எம்15 ஆனது 6.5-இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்பிளே, டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 25W சார்ஜிங் உடனான 6000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.
மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எம்55 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் உடன் வரும் சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 50எம்பி செல்பீ கேமரா, 45W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும்.
10. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரீஸ் (Infinix Note 40 Pro 5G Series): சமீபத்தில் உலகளவில் அறிமுகமான இந்த சீரிஸ் 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரீஸின் கீழ் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Infinix Note 40 Pro Plus 5G) என 2 மாடல்கள் அறிமுகமாகும்!


Click it and Unblock the Notifications








