Home
Mobile

5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது.. ஏப்ரல் 2024.. மொத்தம் மார்க்கெட்டுக்கும் நல்ல மாசம்!

ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்த அனைவருக்குமே.. 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களானது "நல்ல விருந்தாக" அமைந்தது. இருந்தாலும் கூட இதுவரை வெளியான எந்த ஸ்மார்ட்போனுமே உங்களை ஈர்க்கும்படி இல்லை என்றால்.. கவலை வேண்டாம். வருகிற 2024 ஏப்ரல் மாதம் அப்படி இருக்காது!

ஏனென்றால்.. சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் ரியல்மி ஆகிய 4 நிறுவனங்களுமே தங்களுடைய பெஸ்ட் ஓவர்-ஆல் ஸ்மார்ட்போன்களை 2024 ஏப்ரல் (April 2024) மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ள. அதென்ன மாடல்கள்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஏப்ரல் 2204.. 5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது!

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.25,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ், 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி,120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான எட்ஜ்-டு-எட்ஜ் 1.5கே ரெசல்யூஷன் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், யூஎப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஆக்சிஜென் ஓஎஸ் 14 போன்றவைகளை கொண்டிருக்கும்.

ஏப்ரல் 2204.. 5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது!

02. மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro): மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.60,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், வேகன் லெதர் பேனல் மற்றும் மெட்டல் ஃபிரேம் உடனான பிரீமியம் டிசைன், 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு OLED பேனல், 8கே வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கும்.

ஏப்ரல் 2204.. 5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது!

03. சாம்சங் கேலக்ஸி எம்55 (Samsung Galaxy M55): சாம்சங்கின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இன்னும் ஒரு சில தினங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.30,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 ஜென்n 1 சிப்செட், 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 50எம்பி அல்லது 64எம்பி மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 6.1 ஓஎஸ் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

ஏப்ரல் 2204.. 5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது!

04. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro): ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனும் கூட அடுத்து வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இந்த போனின் சரியான வெளியீட்டு தேதியும் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.40,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நினைவூட்டும் வண்ணம் இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்டது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5400mAh பேட்டரி, 6.7-இன்ச் கர்வ்டு டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு உள்ளது.

2024 மே மாதம் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட இது வருகிற மே 14 ஆம் தேதி அன்று நடக்கும் கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மாநாட்டில் (Google I/O 2024) அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது டென்சர் ஜி3 சிப்செட், கூகுளின் சிறந்த ஏஐ அம்சங்களுடன் சிறந்த ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், 6.1-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே, 64எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இந்தியாவில் இது ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Mobile Phones Launching in April 2024 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X