வெளுத்துக்கட்டுது ஆர்டர்.. ரூ.20000 போதும்.. QUAD கேமரா.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி விலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) போன் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, குவாட் பிக்சல் கேமரா போன்ற பீச்சர்களில் பின்னெயெடுக்கிறது. விவரம் இதோ.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த மோட்டோவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ விஷன் (Macro Vision) சப்போர்ட் வருகிறது.

4K அல்ட்ரா எச்டி (UHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல போர்ட்ராய்டு வீடியோ (Portrait Video), டூயல் கேப்ச்சர் வீடியோ (Dual Capture Video), ஸ்பாட் கலர் (Spot Colour) மற்றும் நைட் விஷன் (Night Vision) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு இந்த மோட்டோ மாடல் பக்காவான அவுட்புட் கொடுக்கும்.
குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் கேப்ச்சர், ஸ்பாட் கலர், போட்டோ பூத் போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி - ஜி610 ஜிபியு (Mali-G610 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. டிஸ்பிளே அம்சங்களும் மிரளவிட்டுள்ளன. 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் (3D Curved) மாடலாகும்.
144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust resistant) வருகிறது. சிலிகான்/வேகன் லெதர் டிசைன் கொண்டிருக்கிறது.
இந்த டிசைனில் பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay), சூதிங் சி (Soothing Sea) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.20,899 தள்ளுபடியில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டுக்கு இந்த தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








