அடிதூள்.. சத்தமில்லாமல் 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய Motorola.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அதன் மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது. அதாவது இந்த போன் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்தது.
ஆனால் தற்போது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் (Android 14 Update) கிடைக்கத் தொடங்கி உள்ளது. இதுதவிர செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் கூட இந்த போனுக்கு கூட கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

நோட்டிபிகேஷன் ஃப்ளாஷ்கள் (Notification Flashes), கேமரா மற்றும் பேட்டரி ஆயுள் மேம்பாடுகள், லாக் ஸ்கிரீன் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும் இந்த ஆண்ட்ராய்டு 14 அப்டேட். குறிப்பாக மோட்டோரோலா ஜி84 5ஜி போன் பயனர்கள் தங்கள் போன்களில் உள்ள செட்டிங்ஸ் ஆப்பிற்கு செல்வதன் மூலம் கைமுறையாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை சரி பார்க்கலாம் மற்றும் இன்ஸ்டால் செய்யலாம்.
அதேபோல் அப்டேட் செய்வதற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போனில் 50 சதவீத பேட்டரி சார்ஜ் மற்றும் நிலையான வைஃபை அல்லது செல்லுலார் கனெக்டிவிட்டி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். மேலும் இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஜி84 5ஜி அம்சங்கள் (Motorola g84 5G specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm)சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவு (Adreno 619L GPU) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்தது. பின்பு இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸலாட் ஆதரவு உள்ளது.ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் போன்ற சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்தது மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக விவா மெஜந்தா, மார்ஷ்மெல்லோ ப்ளூ, மிட்நைட் ப்ளூ நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். பின்பு 16எம்பி செல்பி கேமரா, 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








