அணுஅணுவாய் செதுக்கி இருக்காங்க: பார்த்த உடன் வாங்க வைக்கும் Huawei Nova Y90 அறிமுகம்

|

Huawei Nova Y90 ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Huawei Nova Y90 அறிமுகம்

Huawei Nova Y90 அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் Huawei Nova Y90 ஸ்மார்ட்போனை இன்று (ஜூன் 24) அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் உலகளாவிய வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் எட்ஜ் முழு வியூ டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. இதன் முன்பக்க கேமராவானது டிஸ்ப்ளே மேற்புற மையத்தில் பொருத்தப்பட்ட கட்அவுட் அம்சத்தோடு இருக்கிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.

40 வாட்ஸ் ஹூவாய் சூப்பர் சார்ஜ்

40 வாட்ஸ் ஹூவாய் சூப்பர் சார்ஜ்

Huawei Nova Y90 ஸ்மார்ட்போனானது 40 வாட்ஸ் ஹூவாய் சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வெளியாகி இருக்கிறது. இந்த சாதனத்தில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா வசதி உட்பட மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது.

 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

Huawei Nova Y90 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் நான்கு வண்ண விருப்பத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது க்ரிஸ்டல் ப்ளூ, எமரால்ட் க்ரீன், மிட்நைட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகும். Huawei Nova Y90 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Huawei Nova Y90 சிறப்பம்சங்கள்

Huawei Nova Y90 சிறப்பம்சங்கள்

Huawei Nova Y90 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 90 HZ விகதத்துடன் கூடிய 6.7 இன்ச் முழு HD+ (1,080x2,388 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. Huawei சாதனத்தில் மிகவும் மெல்லிய பெசல்கள் இருக்கிறது. இதன்காரணமாக இதில் Edgeless FullView Display சாதனம் என நிறுவனம் இதை குறிப்பிட்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.

Huawei Nova Y90 கேமரா ஆதரவுகள்

Huawei Nova Y90 கேமரா ஆதரவுகள்

Huawei Nova Y90 கேமரா ஆதரவுகளை பொறுத்த வரையில், இந்த சாதனத்தில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது. 2 எம்பி கேமரா இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. சாதனத்தின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 8 எம்பி சென்சார் இணைக்கப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

Huawei Nova Y90 ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்ப வசதியோடு கிடைக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது Huawei SuperCharge 40 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவோடு இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சாதனத்தை 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இதன் எடை 195 கிராம் ஆகும்.

 ஹூவாய் பி50 இ அறிமுகம்

ஹூவாய் பி50 இ அறிமுகம்

முன்னதாக ஹூவாய் நிறுவனம் ஹூவாய் பி50 இ சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 50 எம்பி பிரதான கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி வசதி மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஹூவாய் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.53,600 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அப்சிடியந் பிளாக், கோகோ கோல்ட், ஸ்னோ ஒயிட் மற்றும் கேலக்ஸி ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியானது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு

6.5-இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மேல் மையத்தில் துளை-பஞ்ச் கேமரா கட்அவுட்டைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிரான் 778ஜி 4ஜி செயலி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி வைட் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இந்த சாதனத்தில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Huawei Nova Y90 Smartphone Launched With Edgeless Fullview Display, 50MP Primary Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X