சீனாக்காரன் மூளையே தனி.. Clamshell டிசைன்ல 4 கேமரா.. ஆசையை தூண்டும் விலையில் Pocket 2 அறிமுகம்!
4 ரியர் கேமரா யூனிட்களை கொண்ட முதல் கிளாம்ஷெல் ஃபோல்டபிள் (First Clamshell Foldable ) ஸ்மார்ட்போனாக ஹூவாய் பாக்கெட் 2 (Huawei Pocket 2) அறிமுகமாகியுள்ளது. இதன் விலை நிர்ணயம் என்ன என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஹூவாய் பாக்கெட் 2 ஃபோல்டபிள் போனின் அம்சங்கள்: ஹூவாய் பாக்கெட் 2-வின் இன்னர் டிஸ்பிளேவானது 2690 x 1136 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெப்ரெஷ் ரேட், 1440ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2200 நிட்ஸ் பேக் ப்ரைட்னஸ் லெவல் மற்றும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.94-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி பேனலை (LTPO OLED panel) கொண்டுள்ளது.

மறுபுறம் உள்ள இதன் கவர் டிஸ்பிளேவானது 360 x 360 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 1.15-இன்ச் ஓஎல்இடி பேனலை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, இதில் கிரின் 9000எஸ் ப்ராசஸரை (Kirin 9000s SoC) பேக் செய்கிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹார்மனி ஓஎஸ் 4.0 (HarmonyOS 4.0) உடன் வரும் ஹூவாய் பாக்கெட் 2 ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமரா செட்டப்பை (Quad rear camera setup) கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் உள்ளது.

கூடவே அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 12 மெகாபிக்சல் சென்சார் + 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் கேமராவும் (Hyperspectral camera) உள்ளது. இன்னர் டிஸ்பிளேவின் மேற்புறத்தில் உள்ள ஹோல்-பன்ச் ஸ்லாட்டில் 10.7-மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. இப்படியாக இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் உள்ளன.
ஹூவாய் பாக்கெட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 66W வயர்டு, 40W வயர்லெஸ் மற்றும் 7.5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Wireless reverse charging support) உடனான 4520mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான (Splash resistance) ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கை (IPX8 Rating) பெற்றுள்ள ஹூவாய் பாக்கெட் 2 கிளாம்ஷெல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 202 எடையுள்ள இருக்கிறது. அளவீடுகளை பொறுத்தவரை, இது விரிக்கப்படும் போது 7.25 மிமீ தடிமனாகவும், மடிக்கும்போது 15.3 மிமீ தடிமனாகவும் இருக்கும்.
ஹூவாய் பாக்கெட் 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் விலை: இந்த ஸ்மார்ட்போன் எலிகன்ட் பிளாக் ( Elegant Black), ரோகோகோ ஒயிட் ( Rococo White), டஹிடியன் கிரே (Tahitian Grey) மற்றும் டாரோ பர்பிள் (Taro Purple) என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில், ஹூவாய் பாக்கெட் 2 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.86,400 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.92,200 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,03,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் பாக்கெட் 2 ஸ்மார்ட்போனின் ஆர்ட் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வருகிறது. இந்த மாடலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,26,800 ஆகும். ஹூவாய் பாக்கெட் 2 ஸ்மார்ட்போனானது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் அல்லது அறிமுகம் ஆகுமா என்பது குறித்த எந்த தகவலையும் ஹூவாய் நிறுவனம் பகிரவில்லை.


Click it and Unblock the Notifications