வீட்டுக்குள்ள TV இல்ல.. டிவிகுள்ள தான் வீடு.. வாய் பிளக்க வைக்கும் 98-inch டிஸ்பிளே.. என்ன மாடல்? என்ன விலை?
இந்த ஸ்மார்ட் டிவிக்கு முன்னால்.. 32-இன்ச் டிவி மட்டுமல்ல 65-இன்ச் டிவி கூட ஜுஜுபி தான்! ஏனென்றால் இந்த டிவி ஸ்க்ரீனின் அளவு 98-இன்ச் ஆகும். இது எந்த நிறுவனத்தின் டிவி? இதன் விலை என்ன? இந்தியாவில் கிடைக்கிறதா? இதோ விவரங்கள்:
இது எந்த கம்பெனியின் டிவி? நாம் இங்கே பேசுவது சீன நிறுவனமான ஹூவாய் (Huawei) பிராண்டின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் டிவியான (Flagship Smart TV) ஹூவாய் ஸ்மார்ட் ஸ்க்ரீன் வி5 ப்ரோ (Huawei Smart Screen V5 Pro) மாடலை பற்றித்தான்.

நினைவூட்டும் வண்ணம் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி சீரிஸ் (Smart Screen V Series) என்பது ஹூவாய் நிறுவனத்தின் உயர்தர முதன்மை டிவி சீரீஸ் ஆகும். இது ஏராளமான பிரீமியம் அம்சங்களை (Premium Fatures) பேக் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆக கண்டிப்பாக புதிய ஹூவாய் ஸ்மார்ட் ஸ்க்ரீன் வி5 ப்ரோ மாடலும் பல வகையான பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஹூவாய் பகிர்நதுள்ள அதிகாரப்பூர்வ போஸ்டரின் (Official Poster) அடிப்படையில், ஸ்மார்ட் ஸ்கிரீன் வி5 ப்ரோ மாடலின் டிஸ்பிளேவிற்கு மேலே "கிட்டத்தட்ட" பெசல்களே (No Bezels) இல்லை. ஆக அங்கே கேமராக்களும் (Camera) இருக்காது. சீன சமூக ஊடகத்தளமான வெய்போ (Wiebo) வழியாக @kanshanzhushu என்கிற பயனரின் கூற்றுப்படி, இந்த டிவி இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில் வரும்: 85 இன்ச் மற்றும் 98 இன்ச்!
இந்த டிவி இந்தியாவில் வாங்க கிடைக்குமா? இதன் விலை நிர்ணயம் என்ன? இது வருகிற செப்டம்பர் 25 அன்று அறிமுகம் சீன அறிமுகத்தை மட்டுமே காணவுள்ளது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை. விலை நிர்ணயம் குறித்தும் எந்த தகவலும் இல்லை.
ஆனால் நிச்சயம் இது மலிவான விலைக்கு அறிமுக, செய்யப்பபடாது. இது 2023 ஆம் ஆண்டிற்கான ஹூவாய் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டிவி என்பதால் இதன் விலை நிச்சயம் அதிகமாகவே இருக்கும். எடுத்துக்காட்டிற்கு ஹூவாய் நிறுவனத்தின் வி85 (V85) மற்றும் வி98 (V98) போன்ற டிவி மாடல்கள் சுமார் $2,400 மற்றும் $3,500 க்கு வெளியாகின.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி முறையே ரூ.1,99,000 மற்றும் ரூ.2,90,250 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுளளன. ஆக ஹூவாய் ஸ்மார்ட் ஸ்க்ரீன் வி5 ப்ரோவும் கூட இதேபோன்ற ஹை-எண்ட் பிரீமியம் விலை நிர்ணயத்தையே பெறும். இப்போதைக்கு இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 98-இன்ச் டிவியை (Best 98 inch Smart TV in India) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 98-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் நியோ-க்யூஎல்இடி டிவி (98-inch 4K Ultra HD Smart Neo-QLED TV) மாடலை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.15,74,000 க்கு வாங்க கிடைக்கிறது. சோனி (SONY), ரெட்மி (Redmi), டிசிஎல் (TCL), வு (vu) போன்ற மற்ற நிறுவனங்களிடமும் கூட 98-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் உள்ளன. ஆனால் அவைகளில் பெரும்பாலான மாடல்கள் இந்தியாவில் வாங்க கிடைப்பதில்லை.
ஒருவேளை நீங்கள் பெஸ்ட் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (Best 65 inch Smart TV India) வாங்க விரும்பினால், சோனி பிராவியா 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியை கருத்தில் கொள்ளலாம். இதன் விலை ரூ.84,490 ஆகும். அடுத்ததாக எல்ஜி 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவியையும் நம்பி வாங்கலாம். இதன் விலை ரூ.1,59,990 ஆகும்.


Click it and Unblock the Notifications