Home
News

வாய்பிளந்த மார்க்கெட்.. இனி இயர்போன்ஸை இப்படி தான் போடணும்.. Huawei FreeClip டிசைன் அள்ளுது.. என்ன காரணம்?

ஹுவாய் (Huawei) நிறுவனம் இன்று 2 புதிய சாதனங்களை துபாயில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்று டேப்லெட் (Tablet) மாடலாகும். மற்றொன்று மிகவும் விதியசமான புதிய வடிவ இயர்போன்ஸ் (Earphones) மாடலாகும். இதுவொரு ஓபன்-பேக் இயர்போன்ஸ் (open-back earphones) மாடலாகும்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹுவாய் (Huawei) நிறுவனத்தின் அறிமுக நிகழ்வு இன்னும் சில மணிநேரங்களில் துபாயில் நடைபெற உள்ளது. இந்த அறிமுகம் நிகழ்வு லைவ் (Live) செய்யப்படுவதற்கு முன்பாக, ஒரு சுவாரசியமான தகவல் இப்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. ஹுவாய் நிறுவனம் அதன் இயர்போன்ஸ் (Huawei earphones) வரிசையில், மிகவும் விதியசமான மற்றும் சக்தி வாய்ந்த இயர்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாய்பிளந்த மார்க்கெட்.. இனி இயர்போன்ஸை இப்படி தான் போடணும்..

மார்க்கெட்டை வாய்பிளக்க வைத்த புது ஹுவாய் ஃபிரீகிளிப் இயர்போன்ஸ் டிசைன் (New HUAWEI FreeClip Earphones Design that took the market by storm):

இன்று நடைபெற உள்ள அறிமுக நிகழ்வில், நிறுவனம் அதன் ஸ்லீக் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன், ஹுவாய் நிறுவனம் முதல் ஓபன்-பேக் இயர்போன்ஸ் (Huawei's first open-back earphones) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இயர்போன்ஸ் மாடலை நிறுவனம் ஹுவாய் ஃபிரீகிளிப் (Huawei FreeClip) என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய ஹுவாய் ஃபிரீகிளிப் ஓபன்-பேக் இயர்போன்ஸ் (Huawei FreeClip Open-back Earphones) மாடலின் புகைப்படம் மற்றும் சிறப்பம்ச தகவல்கள் இப்போது லீக் செய்யப்பட்டுள்ளன. அதை பற்றி இப்போது முழுதாக பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் பார்ப்பது போல, புதிய ஹுவாய் ஃபிரீகிளிப் இயர்போன்ஸ் (Huawei FreeClip Earphones) மாடல் 2 வித்தியாசமான பாகங்களாக வருகிறது.

புதிய சி-பிரிட்ஜ் டிசைன் (New C-Bridge design):

இந்த Huawei FreeClip இயர்போன்ஸ்கள் வளைந்த புதுமையான வடிவமைப்பை கொண்டுள்ளன. இந்த வடிவமைப்பை நிறுவனம் சி-பிரிட்ஜ் (C-Bridge) டிசைன் என்று அழைக்கிறது. இதுவொரு மாடர்ன் தொழில்நுட்ப வடிவமைப்பு என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய வடிவமைப்பு ஓபன் பேக் இயர்போன்ஸ் அனுபவத்தை சுகமாக்கியுள்ளது. ஆம், இது உங்கள் காதுகளில் அசைவுகரியத்தை குறைக்கிறது.

வாய்பிளந்த மார்க்கெட்.. இனி இயர்போன்ஸை இப்படி தான் போடணும்..
ஹுவாய் ஃபிரீகிளிப் ஓபன் பேக் இயர்போன்ஸ் சிறப்பம்சம் (Huawei FreeClip Open Back Earphones Specifications):

நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்றார் போல இந்த Huawei FreeClip இயர்போன்ஸ் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் நிறுவனம் இன்பில்ட் வென்டிலேஷன் அம்சத்தையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் ஏர்ப்ளோ அதிகமாகிறது மற்றும் சவுண்ட் தரம் உயர்கிறது. இந்த வித்தியாசமான இயர்போன்ஸ்களை சார்ஜ் செய்ய நிறுவனம் வழக்கமான வடிவத்தில் சார்ஜிங் கேஸை வழங்கியுள்ளது.

ஆனால், சார்ஜிங் கேஸ் உள்ளே நிறுவனம் அதன் தனித்துவத்தை தெளிவாக காண்பித்துள்ளது. 2 ஹுவாய் ஃபிரீகிளிப் இயர்பட்ஸ்களை சொருகி வைப்பதற்கு ஏற்றார் போன்ற வடிவமைப்பை உள்ளே வழங்கியுள்ளது. இது 8 மணி நேர பிளே பேக் நேரத்தை வழங்கும் பெரிய பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பிளே செய்யும் சக்தியை இது கொண்டுள்ளது.

இது பிளாக் மற்றும் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கும் என்று கூரப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் சில மணி நேரம் உள்ள நிலையில், இந்த புதிய வித்தியாசமான ஹுவாய் ஃபிரீகிளப் ஓபன் பேக் இயர்போன்ஸ் மாடலின் விலை மற்றும் விற்பனை விபரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம். அதுவரை எங்களுட இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei FreeClip Open Back Earphones Model Launching With 8 Hours Playback Time In New C Bridge Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X