Home
News

மிரண்டு போன ஸ்மார்ட்போன் சந்தை.. 2 முன்பக்க கேமரா.. 3 ரியர் கேமரா.. அலறவிடும் புது Huawei Nova 12 Pro..

ஹூவாய் (Huawei) நிறுவனம் டூயல் செல்பி கேமராவுடன், முன்பக்க டிஸ்பிளேவில் 2 பன்ச் ஹோல் நாட்ச்சுடன் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது முன்னால் 2 கேமராவுடனும் மற்றும் 3 ரியர் கேமராவுடன் வருகிறது. இது எந்த மாடல் என்ற விபரம் இதோ.

ஹூவாய் நோவா 11 எஸ்இ (Huawei Nova 11 SE) என்ற பெயருடன் ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் புதிய போனை அறிமுகம் செய்தது. இதை ஹூவாய் (Huawei) நிறுவனம் சீன சந்தையில் மிட்-ரேஞ் செக்மென்ட் பிரிவின் கீழ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூவாய் பிராண்ட் ஹூவாய் நோவா 12 (Huawei Nova 12) சீரிஸ் போன்களை இந்த மாதம் அல்லது டிசம்பரில் சீனாவில் வெளியிடும் என்று ஊகங்கள் பரவலாக உள்ளன.

மிரண்டு போன ஸ்மார்ட்போன் சந்தை.. 2 முன்பக்க கேமரா.. 3 ரியர் கேமரா..

இந்த வரிசையானது ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) தொடர் மற்றும் விவோ எஸ்18 (Vivo S18) தொடர்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சில தின இடைவெளியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய் நோவா 12 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

அந்த கசிந்த ரெண்டர் தகவல் படி, இது தனித்துவமான முன் மற்றும் பின்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்த தகவலின் படி, ஹூவாய் நோவா 12 ப்ரோ (Huawei Nova 12 Pro) முன்பக்கத்தில் வளைந்த கர்வுடு OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது இரண்டு தனித்தனி செல்ஃபி கேமரா கட்அவுட்களைக் கொண்டுள்ளது.

இந்த போனில் 60 மெகாபிக்சல் டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதாக வதந்திகள் வந்துள்ளன. ஹூவாய் நோவா 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பும் ஒரு தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், இது மேலே முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஓவல் வடிவ கேமரா ஐலேண்ட் உடன் இந்த போன் ரெண்டார் புகைப்படத்தில் காணப்பட்டுள்ளது.

இத்துடன் இன்னும் இரண்டு லென்ஸ்களை இந்த ஸ்மார்ட்போன் LED ஃபிளாஷ் உடன் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், மேக்ரோ லென்ஸாகவும் செயல்படக்கூடியது மற்றும் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Huawei Nova 12 Pro ஆனது 5G இயக்கப்பட்ட கிரீன் 9000எஸ் (Kirin 9000s) சிப்செட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் OLED பேனல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Harmony OS 4 இல் இயங்கும். இது டூயல்-வே சாட்டிலைட் இணைப்புக்கான ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

அதேபோல், ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து, இந்த ப்ரோ மாடலுடன், நிலையான நோவா 12 மாடலையும் நிறுவனம் வெளியிடகைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஸ்டாண்டர்ட் ஹூவாய் நோவா 12 சாதனம் புதிய கிரீன் 830 (Kirin 830) சிப்செட் பொருத்தப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. டூயல் செல்பி கேமராவுடன் ஒரு புதிய போனை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்கள் விருப்பம் இந்த ஹூவாய் நோவா 12 சாதனமாக இருக்க வேண்டும் மக்களே.

Best Mobiles in India

English summary
Huawei Nova 12 Pro with dual selfie camera spotted with render picture online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X