மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
ஹுவாவேய் (HUAWEI) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 4 ஸ்மார்ட்போன் மாடல்களை சேர்த்துள்ளது. இது ஹுவாவேய் புரா 70 சீரிஸ் (HUAWEI Pura 70 Series) வரிசையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுட்டள்ளது.
ஹுவாவேய் நிறுவனம், இந்த புதிய ஹுவாவேய் புரா 70 சீரிஸ் வரிசையின் கீழ் ஹுவாவேய் புரா 70 (HUAWEI Pura 70), ஹுவாவேய் புரா 70 ப்ரோ (HUAWEI Pura 70 Pro), ஹுவாவேய் புரா 70 ப்ரோ பிளஸ் (HUAWEI Pura 70 Pro+), மற்றும் ஹுவாவேய் புரா 70 அல்ட்ரா (HUAWEI Pura 70 Ultra) ஆகிய 4 மாடல்கள் வெளிவருகிறது.

ஹுவாவேய் புரா 70 சீரிஸ் அறிமுகம் (HUAWEI Pura 70 Series Launch):
ஹுவாவேய் அறிமுகம் செய்துள்ள இந்த 4 ஸ்மார்ட்போன்களில் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் மாடல் தட்டையான பிளாட் டிசைன் வடிவமைப்பை பெற்றுள்ளது. மறுபுறம் ப்ரோ மாடல்கள் மெல்லிய வளைந்த கர்வுடு டிஸ்பிளே எட்ஜஸை கொண்டுள்ளன. அணைத்து மாடல்களும் உயர் தர ரெஃப்ரஷ்க் ரேட் ஆதரவை கொண்டுள்ளன. ஸ்டாண்டர்ட் புரா 70 ஸ்மார்ட்போன்கள் 6.6" இன்ச் அளவு LTPO டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் கிரீன் 9010 சிப்செட் (Kirin 9010 chipset) உடன் வழங்குகிறது. இதன் கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில், எல்லா ஸ்மார்ட்போன்களும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளன. ஆனால், ப்ரோ மாடல்கள் மிகவும் அதிக திறன் கொண்ட சென்சார்களை பெற்றுள்ளன. எந்த மாடல் என்ன கேமராவை பெற்றது என்று இப்போது பார்க்கலாம்.
பேசிக் ஹுவாவேய் புரா 70 சாதனம் 50MP பிரைமரி சென்சார் (primary sensor), 13MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் (ultrawide-angle lens) மற்றும் 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ (periscope telephoto) சென்சார்களை கொண்டுள்ளது. அடுத்தபடியாக ப்ரோ மற்றும் ப்ரோ+ மாடல்கள் 50MP பிரைமரி சென்சார் (primary sensor), 12.5MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் (ultrawide-angle lens) மற்றும் 48MP மேக்ரோ டெலிபோட்டோ (macro telephoto) சென்சார்களை கொண்டிருக்கும்.

1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமரா கொண்ட HUAWEI போன்:
இந்த சீரிஸ் வரிசையில் உள்ள டாப் டையர் மாடலான ஹுவாவேய் புரா 70 அல்ட்ரா சாதனம் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவை கொண்டிருக்கும். இதில் 50MP மெயின் கேமரா, 40MP அல்ட்ரா வைடு, மற்றும் 50MP மேக்ரோ டெலிபோட்டோ 100x டிஜிட்டல் ஜூம் (digital zoom) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய வடிவமைப்பே இதன் கேமராவை உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் டிசைன் மூலம் தெளிவாகிறது.
ஸ்டாண்டர்ட் மாடல் 4900mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இது 66W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் (66W wired fast charging), 50 W வயர்லெஸ் சார்ஜிங் (50W wireless chargin) மற்றும் 5W வயர்டு / 7.5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் (5W wired/7.5W wireless reverse charging) போன்றவற்றை கொண்டிருக்கும். இதேபோல், ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்கள் 5050mAh பேட்டரியை கொண்டுள்ளன.
இறுதியாக, இதன் ஹை-எண்டு மாடலான அல்ட்ரா வேரியண்ட் மாடலில் நிறுவனம் 5200mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் (100W wired fast charging), 80W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 18W வயர்டு / 20 வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கை (18W wired/20W wireless reverse charging) கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.63,455 விலை முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications