உலகத்தில் எந்தவொரு போனிலும் இல்லாத "அந்த" ஒரு அம்சம்.. பூமி - விண்வெளிக்கு இணைப்பு.. அசால்ட் செய்த HUAWEI..
ஹூவாய் (HUAWEI) நிறுவனம் திடீரென சத்தமில்லாமல் ஒரு புது ஸ்மார்ட்போனை சாட்டிலைட் காலிங் அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் மூலம், HUAWEI ஆனது புதிய ஃபிளாக்ஷிப் போனான ஹூவாய் மேட் 60 ப்ரோவை சீனாவில் வெளியிட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஹூவாய் மேட் 50 ப்ரோ (HUAWEI Mate 50 Pro) மாடலின் வாரிசு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஹூவாய் மேட் 60 ப்ரோ (HUAWEI Mate 60 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் LTPO (1-120Hz) தொழில்நுட்பத்துடன் புதிய 6.82' இன்ச் FHD+ OLED குவாட்-வளைந்த டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 1,440Hz PWM டிம்மிங், 2வது ஜெனரல் குன்லூன் கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 13எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3டி டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் பஞ்ச்-ஹோல் ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்ட 1.07 பில்லியன் கலர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது சாட்டிலைட் காலிங் (Satellite calling) அழைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த அம்சத்தை கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
HUAWEI Mate 50 Pro போனின் சிப்செட் பற்றிய விபரங்களை HUAWEI அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், சாதனத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் இது கிரீன் 9000எஸ் (Kirin 9000s) சிப்செட்டைப் பயன்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கீக்பெஞ்ச் (Geekbench) படி , இது 2.62 GHz உயர் கிளாக் வேகம் மற்றும் 1.53 GHz குறைந்த கிளாக் வேகம் கொண்ட ஆக்டா-கோர் சிப்செட்டாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் F1.4 - F4.0 சென்சார், 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 48MP 3.5x உடன் 50MP சூப்பர்-ஸ்பாட்டிங் பிரைமரி கேமரா உள்ளது. 100x ஜூம் வரம்பைக் கொண்ட ஆப்டிகல் ஜூம் கேமராவை இது கொண்டுள்ளது. டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம் மேக்ரோவை சுட செய்யும் விருப்பமும் இதில் உள்ளது.
ஹூவாய் மேட் 60 ப்ரோ ஆனது 88W வரை பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்குகிறது. அதேபோல, இது 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 12ஜிபி ரேம், 256ஜிபி / 512ஜிபி / 1டிபி ஸ்ட்ரோசாஜ் உடன் வெளிவரும். இது ஹார்மனி ஓஎஸ் 4.0 உடன் இயங்கும்.

இது டூயல் சிம் கார்டுகள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு, யுஎச்பி டைப் -சி (USB Type-C) போர்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ax (2.4GHz மற்றும் 5GHz), புளூடூத் 5.2 LE, GPS (L1 + L5 டூயல் பேண்ட்), NFC, USB 3.1 Type-C (GEN1) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இதன் 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை 6599 யுவான் என்று கூறப்பட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.75,837 ஆகும். இதன் 12ஜிபி + 512ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 79,404 ஆகும். இதன் 12ஜிபி + 1டிபி (TB) மாடலின் விலை ரூ. 87,330 ஆகும். இது விரைவில் சீனாவில் Huawei இன் Vmall ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும். இது யாக்குவான் க்ரீன் (Yachuan Green), பைஷா சில்வர் (Baisha Silver), நானுனோ பர்பிள் (Nannuo Purple) மற்றும் யடன் பிளாக் (Yadan Black) வண்ணங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








