Home
News

ஆப்பிளுக்கு ஆப்பு.. எந்த Android போனிலும் இல்லாத கேமரா.. Huawei ரெடி செய்யும் 1 இன்ச் கேமரா..

ஹூவாய் (Huawei) நிறுவனம் மற்ற ஸ்மார்ட்போன் (Smartphone) பிராண்டுகளை எல்லாம் அடித்து தூக்கும் ஒரு தரமான சம்பவத்தை செய்ய தயாராகிவிட்டது. குறிப்பாக, ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒரு புதிய டிரெண்டை செட் செய்தது, அதை ஹுவாய் ஆண்ட்ராய்டு போன்களில் நிஜமாகியுள்ளது.

பல புதிய அம்சங்களை உலகிற்கு முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் சாதனங்களில் அதிநவீன புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து, டெக்னலாஜி வட்டாரத்தில் ஒரு புது டிரெண்ட் செட்டராகவே வலம் வருகிறது. ஆண்ட்ராய்டு போன்களின் வரலாற்றில், வரும் 2024 ஆம் ஆண்டில் ஹுவாய் நிறுவனம் புதிய டிரெண்டை செட் செய்யவுள்ளது.

ஆப்பிளுக்கு ஆப்பு.. எந்த Android போனிலும் இல்லாத கேமரா.. Huawei.!

ஹுவாய் (Huawei) நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் ஹுவாய் மேட் பி60 (Huawei Mate P60) சீரிஸ் போன்களில், நிறுவனத்தின் சொந்த இன்பில்ட் ஹைசிலிக்கான் கிரீன் 9000s (HiSilicon Kirin 9000s) சிப்செட்டை அறிமுகம் செய்து தனக்கான சொந்த இடத்தை உருவாக்கிக்கொண்டது. இப்படி மக்கள் மத்தியில் ஹுவாய் மேட் 60 (Mate 60) ஒரு தனி அடையாளத்தை பெற்ற பிறகு, நிறுவனம் இப்போது மற்றொரு தனித்துவ அடையாளத்தை பெற உள்ளது.

ஹுவாய் P70 சீரிஸ் மொபைல் போன் (Huawei P70 Series Mobile Phones):

ஹுவாய் பி60 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வருகிற 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஹுவாய் P70 தொடரில் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவை கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நமக்கு என்ன தெரியும் என்ற விபரம் இதோ.

Huawei P60 தொடர் போலவே, Huawei P70 தொடர் மூன்று சாதனங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் அதிகாரப்பூர்வமாக ஹுவாய் பி70 (Huawei P70), ஹுவாய் பி70 ப்ரோ (Huawei P70 Pro) மற்றும் ஹுவாய் பி70 ஆர்ட் (Huawei P70 Art) என்ற மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும். இதில் ஹுவாய் P70 ஆர்ட் மாடல் இந்த சீரிஸ் இன் டாப்-எண்ட் மாடளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோனில் காணப்பட்ட அதே கேமரா தொழில்நுட்பம் (Camera technology used in iPhone):

இந்த ஹை-எண்டு மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த கேமரா சென்சார் 1G6P கிளாஸ்-பிளாஸ்டிக் ஹைப்ரிட் லென்ஸுடன் இணைக்கப்படும். இந்த வகை லென்ஸுடன் (1G3P) சந்தையில் உள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் அதன் டெட்ராபிரிசம் ஜூம் கேமரா (tetraprism zoom camera) லென்ஸைப் பயன்படுத்துகிறது.

கிளாஸ்-பிளாஸ்டிக் ஹைப்ரிட் லென்ஸ் (Glass-plastic hybrid lens):

கிளாஸ்-பிளாஸ்டிக் ஹைப்ரிட் லென்ஸ்கள் (Glass-plastic hybrid lenses) அதிக சிதைவை எதிர்க்கும் மற்றும் சிறந்த ஆப்டிகல் செயல்திறனை வழங்குகின்றன. லார்கன் மற்றும் சன்னி ஆப்டிகல்ஸ் (Largan and Sunny Optical) இந்த வகை லென்ஸின் முன்னணி உற்பத்தியாளர்களாக திகழ்கின்றன. ஹுவாய் (Huawei) பயன்படுத்தும் 1G6P லென்ஸின் முன்மாதிரி கட்டத்தில் சுமார் $12 செலவாகும்.

இருப்பினும், மகசூல் விகிதங்களில் முன்னேற்றத்துடன் வெகுஜன உற்பத்தியில் செலவு $6-7 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகள் Apple மற்றும் Huawei ஆகியவற்றின் பரந்த தத்தெடுப்புடன் கிளாஸ்-பிளாஸ்டிக் ஹைப்ரிட் லென்ஸ்களைப் பயன்படுத்தும் போக்கைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Huawei P70 சீரிஸ் வரும் மார்ச் 2024 இல் வெளியிடப்படும் என்று வதந்திகள் கூறப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Huawei P70 Art Android Mobile Could Come With 1 Inch Sony Glass Plastic Hybrid Lens Seen In iPhone 15 Pro Max
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X