Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. ரூ.34,917 போதும்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 10X ஜூமிங்.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹூவாய் (HUAWEI) நிறுவனம், 100W சூப்பர்சார்ஜ், 4600mAh பேட்டரி, 50 எம்பி சூப்பர் சென்சிங் கேமரா, 10X டிஜிட்டல் ஜூமிங், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ஹூவாய் நோவா 12 (HUAWEI Nova 12) போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாய் நோவா 12 அம்சங்கள் (HUAWEI Nova 12 Specifications): இந்த ஹூவாய் போனில் ஹர்மோனி ஓஎஸ் 4.0 (Harmony OS 4.0) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 4ஜி (Qualcomm Snapdragon 778G 4G) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஃபயரு பட்ஜெட்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 10X ஜூம்.. 100W சார்ஜிங்!

இந்த போனில் 6.7 இன்ச் (2412 × 1084 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 1.07 பில்லியன் கலர் மற்றும் பி3 வைடு கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹூவாய் நோவா 12 போனில் 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனில் 50 எம்பி சூப்பர்-சென்சிங் (Super-sensing Camera) வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் 5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. அதோடு நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), வாய்ஸ்-ஆக்டிவேடெட் போட்டோ (Voice-activated Photo), போர்ட்ராய்டு போகஸ் டிராக்கிங் (Portrait Focus Tracking) போன்ற பீச்சர்கள் வருகிறது.

ஃபயரு பட்ஜெட்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 10X ஜூம்.. 100W சார்ஜிங்!

அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 60 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹூவாய் நோவா 12 போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் வருகிறது.

இந்த ஹூவாய் போனில் கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் மிரள வைக்கிறது. 100W ஹூவாய் சூப்பர்சார்ஜ் (HUAWEI SuperCharge) சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆகவே, 6.98 மிமீ அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 191 கிராம் எடை வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.

இந்த ஹூவாய் நோவா 12 போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் பேண்ட் ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற அம்சங்கள் வருகின்றன. இந்த மாடலில் கலர் 12 (ப்ளூ), அப்சிடியன் பிளாக் (Obsidian Black), செர்ரி வைட் (Cherry White) ஆகிய 3 கலர்கள் வருகின்றன.

இந்த போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,917ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,574ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, ப்ரீ-ஆர்டருக்கு வந்த ஒரே நாளில் முழுவதும் விற்று தீர்ந்தது. இந்த ஹூவாய் நோவா 12 போனின் விற்பனை ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI Nova 12 With Snapdragon 778G, 50MP Camera Sale on January 5 China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X