நல்ல மாசம் பொறக்குது.. ஆர்டர் போட ரெடியா? இந்த செப்டம்பரில் அறிமுகமாகும் 9 புதிய போன்கள்.. இதோ லிஸ்ட்!
"நல்ல மாசம் பொறக்குது" என்று கூறிவிட்டு.. அதன் பின்னர் 2023 செப்டம்பர் (September) மாதத்தை பற்றி பேசுவதே முறையானதாக இருக்கும். ஏனென்றால், கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான சில ஸ்மார்ட்போன்கள் இந்த செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த செப்டம்பரில்.. பட்ஜெட், மிட்-ரேன்ஜ். பிரீமியம், பிளாக்ஷிப் என கிட்டத்தட்ட விலை பிரிவுகளின் கீழும், பல நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அப்படியான எந்தெந்த தேதிகளில்.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) அறிமுகம் செய்யப்படவுள்ளன? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G): மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 6.55-இன்ச் pOLED 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 30W சார்ஜிங் சப்போர்ட், 50எம்பி OIS கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் (Apple iPhone 15 Series): ஆப்பிள் நிறுவனத்தின் 2023 ஐபோன் மாடல்கள் ஆனது அதாவது ஐபோன் 15 சீரீஸ் ஆனது வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் வெளியாகும்: ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். ஹை-எண்ட் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது ஐபோன் 15 அல்ட்ரா என்கிற பெயரின் கீழ் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 அல்ட்ராவின் விலை நிர்ணயமானது முன்னதாக வெளியான ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலை நிர்ணயத்தை விட அதிகமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி; ஆனால் சரியான விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் செப்.12 ஆம் தேதியன்று தான் வெளியிடப்படும்.
ஒப்போ கே11எக்ஸ் (Oppo K11x): இது வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.17,590 ஆக இருக்குமென்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 எஸ், 6.72-இன்ச் ஃபுல்-எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.
ஹூவாய் பி60 ப்ரோ (Huawei P60 Pro): ஆம்! ஹூவாய் நிறுவனம் 'கம்பேக்' கொடுக்க தயாராக உள்ளது. ஹூவாய் பி60 ப்ரோ மாடலானது இந்திய சந்தையில் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை; பெரும்பாலும் இது இந்த செப்டம்பர் மாதமே அறிமுகமாகிவிடும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.54,490 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அட்டகாசமான அவுட்புட்களை வழங்கும், மிகவும் திறமையான கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது 48MP + 13MP + 48MP என்கிற ரியர் கேமரா செட்டப்பையும், 13MP என்கிற செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 6.67-இன்ச் டிஸ்பிளே, 4815mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open): ஆப்பிளின் புதிய ஐபோனுக்கு பிறகு 2023ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் இன்னொரு ஸ்மார்ட்போன் ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பன் தான். கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE): சாம்சங் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ மாடல் இந்த செப்டம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு எஃப்இ என்பது ஃபேன் எடிஷன் என்பதன் சுருக்கமாகும். இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த எந்த விவரங்களும் இல்லை!


Click it and Unblock the Notifications








