மாஸ் காட்டிய ஹூவாய்.. வித்தியாசமான கேமரா.. தூள் பறக்கும் டிசைன்.. சந்தையை புரட்டிப்போட போகும் Smartphone..
ஹூவாய் (Huawei) நிறுவனம் இந்த ஆண்டு முழு வீச்சில் வேலை செய்வது போல் தெரிகிறது. ஹூவாய் நிறுவனம் சத்தமில்லாமல் பல புதிய சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதில் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Huawei P70 பற்றிய விபரங்கள் இப்போது லீக் ஆகியுள்ளது.
ஹூவாய் பி70 (Huawei P70) என்ற மாடல் இப்போது இணையத்தில் ஒரு விதிஹ்யசமான கேமரா டிஸைனுடன் காணப்பட்டுள்ளது. ஐபோன் சாதனங்களில் காணப்படும் ட்ரையாங்கில் வடிவ கேமரா பம்பை இந்த சாதனம் கொண்டுள்ளது. ஆனால், சிறிய வேறுபாடுகளுடன் கொண்டுள்ளது. இந்த போனில் ஹூவாய் நிறுவனம் இன்னும் பல புதிய அம்சங்களை பேக் செய்துள்ளது.

ஹூவாய் பி70 (Huawei P70):
இந்த ஹூவாய் பி70 (Huawei P70) ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஹூவாய் நிறுவனத்தின் லைவ் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, ஃப்ரீ புக்கிங் செய்ய கிடைக்கும் என்றும் லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த ஹூவாய் பி70 (Huawei P70) ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய ஹூவாய் பி70 (Huawei P70) என்ற சாதனம் ஏப்ரல் மாதத்தில் வெளிவரலாம். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ட்ரையங்குளர் ஐலேண்ட் கேமரா பம்ப் வடிவமைப்பை பெறுவது உறுதி என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் லீக் தகவலும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், இந்த சாதனத்தில் இடம்பெறப்போகும் சில சிறப்பம்சம் பற்றிய விபரங்களும் நமக்கு கிடைத்துள்ளது.
ஹூவாய் பி70 ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த பட்ஜெட் விருப்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், இதில் அப்கிரேட் செய்யப்பட்ட கிரீன் 9010 (Kirin 9010) சிப்செட் சாதனம் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. சரியான சிப்செட் பெயர் மற்றும் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆகையால், இபோதைக்கு இதை நாம் கிரீன் 9xxx என்று வைத்துக்கொள்ளலாம் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

LTPO டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் கேமரா:
ஹூவாய் பி70 ஸ்மார்ட்போன் சாதனத்தின் டிஸ்பிளே பற்றிய விபரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த தகவலின் படி, வரவிருக்கும் புதிய ஹூவாய் பி70 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 6.58 அல்லது 6.8" இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே எதிர்பார்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே ஹை-ரெசொலூஷனை ஆதரிக்கும் கர்வுடு LTPO டிஸ்பிளேவை கொன்டுள்ளது என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த ஹூவாய் பி70 ஸ்மார்ட்போன் சாதனம் OV50H அல்லது IMX989 சென்சார் கொண்ட பிரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ட்ரிபிள் கேமரா அமைப்பில் 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார் மற்றும் 50MP 4x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிடங்கிவை இருக்க கூடும் என்றும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஹூவாய் பி70 ஸ்மார்ட்போனில் சாட்டிலைட் கம்யூனிகேஷன் அம்சங்கள் இடம்பெற கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய தகவல்களை எந்தவொரு லீக் தகவலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை வைத்து பார்க்கையில் இது ரூ.35,000 முதல் ரூ.40,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








