அழகோ அழகு.. 13.2 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 10000mAh பேட்டரி.. Huawei MatePad Pro அறிமுகம்..
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போன்னாவது (Smartphone) இருக்கிறது. இதேபோல் விரைவில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு டேப்லெட் (Tablet) சாதனமாவது இருக்க போகும் நிலை உருவாகப்போகிறது.
ஆம், உலகம் முழுக்க டேப்லெட் சந்தை வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வேகத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள முன்னணி நிறுவனங்கள் எல்லாம் போராடுகின்றன. இதற்காக பல புதிய அம்சங்களை கொண்ட டேப்லெட் சாதனங்களை தொடர்ந்து நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் அடுத்து விரைவில் அறிமுகமாகவிருக்கும் சாதனம் தான் ஹுவாய் மேட்பேட் ப்ரோ (Huawei MatePad Pro).

ஹுவாய் மேட்பேட் ப்ரோ 13.2 (Huawei MatePad Pro 13.2):
இந்த புதிய ஹுவாய் மேட்பேட் ப்ரோ (Huawei MatePad Pro) வரும் டிசம்பர் 12ம் தேதி, துபாய் இல் நடைபெறும் நிகழ்வின் மூலம் உலக சந்தையில் அறிமுகமாகவிருக்கிறது. இதுவரை இந்த சாதனம் ஹுவாய் மேட்பேட் ப்ரோ 11 (Huawei MatePad Pro 11) அல்லது ஹுவாய் மேட்பேட் ப்ரோ 13.2 (Huawei MatePad Pro 13.2) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்படும் என்று குழப்பம் இருந்து வந்தது.
தற்போது, ஹுவாய் (Huawei) நிறுவனம் வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ தகவல் மூலம், இது Huawei MatePad Pro 13.2 என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது. தெரியாதவர்களுக்கு, இந்த ஹுவாய் மேட்பேட் ப்ரோ 13.2 (Huawei MatePad Pro 13.2) கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 13.2" இன்ச் டிஸ்பிளேவுடன் 16ஜிபி ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் வெளியானது.
ஹுவாய் மேட்பேட் ப்ரோ 13.2 விவரக்குறிப்புகள் (Huawei MatePad Pro 13.2 Specifications):
ஹுவாய் மேட்பேட் ப்ரோ 13.2 டேப்லெட் சாதனம் 13.2" இன்ச் பிளேக்சிபில் OLED பேனல் உடன் 2880 x 1920 ரெசொலூஷன் உடன் P3 கலர் காமெட் (color gamut) ஆதரவை கொண்ட டிஸ்பிளேவாக (display) வருகிறது. இது 1000000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (contrast ratio) உடன் வருகிறது. இது மிகவும் ஸ்லிம் டிஸைனுடன் 580 கிராம் எடையுடன் வருகிறது.

16ஜிபி ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் (16GB of RAM + 1TB storage):
இந்த சாதனம் கிரீன் 9000s (Kirin 9000s SoC) சிப்செட் உடன் வருகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் (16GB of RAM + 1TB storage) உடன் வருகிறது. இது பெரிய 10100mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இந்த சாதனம் ராபிட் 88W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சத்தை ஆதரிக்கிறது. இது 85% சார்ஜ்ஜை வெறும் 40 நிமிடங்களில் நிரப்புகிறது.
இது முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 65 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இது 6 டூயல் சேனல் ஸ்பீக்கர் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்பேசியல் ஆடியோ தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகியில், இது 16MP முன்பக்க கேமரா மற்றும் 13MP + 8MP டூயல் கேமரா (camera) அம்சத்துடன் வருகிறது. இது ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) அம்சத்துடன் வருகிறது.
இது ஹார்மோனி ஓஎஸ் 4 (HarmonyOS 4) உடன் வருகிறது. இது மூன்றாம் தலைமுறை எம்-பென் (M-Pen) ஸ்டைலஸ் (stylus) ஆதரவுடன் வருகிறது. இது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக டேப்லெட் வாங்கும் ஐடியா இருந்தால், கொஞ்சம் வெயிட் செய்து இந்த டேப்லெட்டை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








