யார் சார் நீங்க.. ஒரே போனில் 5 கேமரா.. OLED டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களும் அதிரும்படி டிரிபிள் ரியர் சிஸ்டம், டூயல் ஃப்ரன்ட் சிஸ்டம் கேமராக்கள் மட்டுமல்லாமல், 1டிபி மெமரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, லேசர் போகஸ் போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ஹூவாய் நோவா 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் நோவா 12 ப்ரோ, நோவா 12 அல்ட்ரா அம்சங்கள் (HUAWEI Nova 12 Pro, Nova 12 Ultra Specifications): இந்த போன்களில் 6.76 இன்ச் (2776 × 1224 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவில் 300Hz டச் சாம்பிளிங் ரேட், பி3 கலர் காமட் மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. அதோடு குன்லுன் கிளாஸ் பாதுகாப்பு (Kunlun Glass Protection) கொண்டிருக்கிறது. நோவா ப்ரோ போனில் ஹார்மனி ஓஎஸ் 4.0 (Harmony OS 4.0) கொண்ட கிரின் 8000 (Kirin 8000) சிப்செட் வருகிறது.
அதுவே, நோவா அல்ட்ரா போனில் கிரின் 9000எஸ்எல் (Kirin 9000SL) சிப்செட் வருகிறது. அதேபோல நோவா ப்ரோ போனில் 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. நோவா அல்ட்ராவில் 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி வேரியண்ட்கள் வர இருக்கின்றன.
இந்த ஹூவாய் நோவா 12 போன்களின் கேமரா மிரள வைக்கிறது. ஏனென்றால், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் டூயல் ஃப்ரன்ட் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா + லேசர் போகஸ் சென்சார் (Laser Focus Sensor) வருகிறது.

அதேபோல 60 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் செல்பீ கேமரா + 8 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், 2X ஆப்டிகல் ஜூமிங், 5X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், டென் சேனல் கலர் டெம்பரேச்சர் சென்சார் (Ten Channel Color Temperature Sensor) வருகிறது.
ஆகவே, ரியர் மட்டுமல்லாமல், செல்பீயிலும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போன்களில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் வருகிறது. 100W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது.
ஹூவாய் நோவா 12 ப்ரோ போனில் யாவ் கோல்டு பிளாக் (Yao Gold Black), சகுரா பிங்க் (Sakura Pink) மற்றும் சகுரா ஒயிட் (Sakura White) மற்றும் கலர் 12 (ப்ளூ) ஆகிய 4 கலர்கள் வருகின்றன. ஹூவாய் நோவா 12 அல்ட்ரா போனில் கலர் 12 (ப்ளூ), ஸ்மோக்கி கிரே (Smoky Gray) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய 3 கலர்கள் வருகின்றன.
நோவா 12 ப்ரோ போனின் 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.46,559ஆகவும், 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.51,217ஆகவும் இருக்கிறது. அதேபோல நோவா 12 அல்ட்ரா போனின் 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.54,710ஆகவும், 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,024ஆகவும் இருக்கிறது.
இந்த போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது, ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கின்றன. வரும் ஜனவரி 5ஆம் தேதியில் ஹூவாய் நோவா 12 ப்ரோ போனும், ஜனவரி 12ஆம் தேதியில் ஹூவாய் நோவா 12 அல்ட்ரா போனும் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. டூயல் செல்பீ, கிரின் சிப், லேசர் போகஸ் போன்ற அம்சங்கள் கொண்டிருப்பதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








