Home
Gadgets

கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் சூட், மெட்டாலிக் பாடி, வாட்டர் ரெசிஸ்டன்ட், டயல் பேட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனிலும் பட்ஜெட் விலையிலும் நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 (Noise ColorFit Pulse 4) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது.

ஸ்குவார் டிசைன் டயல், சிலிகான் மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் ஆப்ஷன், மல்டிபிள் கலர்கள், நாய்ஸ்ஃபிட் ஆப் சப்போர்ட் போன்ற மற்ற பீச்சர்களிலும் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 பின்னி எடுக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்ப்போம்.

கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்!

நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 அம்சங்கள் (Noise ColorFit Pulse 4 Specifications): இந்த கலர்ஃபிட் மாடலில் 1.85 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். அதோடு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always on Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக இது இருப்பதால், வியூவிங் அனுபவம் மிரளவிடும்படி இருக்கும். முந்தைய நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5.1 கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பல்ஸ் 4 மாடலில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, 10 மீட்டர்கள் வரையில் ப்ளூடூத் காலிங் ரேஞ்ச் (Bluetooth Calling Range) கிடைக்கும்.

ட்ரூ சிங்க் (Tru Sync) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல கண்டாக்ட்ஸ் (Contacts), டயல் பேட் (Dial Pad), கால் லாக்ஸ் (Call Logs) சப்போர்ட் கொண்டுள்ளது. இதுபோல ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) வருகிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 மாடலில் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) பயன்படுத்தி கொள்ளலாம்.

கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்!

ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) மற்றும் ஹெல்த் மானிட்டரிங் (Health Monitoring) சப்போர்ட் கொண்ட நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Suite) உள்ளது. இதற்காக நாய்ஸ்கலர்ஃபிட் ஆப் (NoiseColorFit App) கொடுக்கப்பட்டுள்ளது. ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரை ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) வருகிறது.

அதேபோல டிராக்கர்களை பார்க்கையில், எஸ்பிஓ2 டிராக்கர் (SpO2 Tracker), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) வருகிறது. இந்த டேட்டாக்களை நாய்ஸ்கலர்ஃபிட் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல ஆக்டிவிட்டி டிராக்கர் சப்போர்ட் உள்ளது.

வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் போன்ற ஸ்போர்ட்ஸ் மோட்களின் டேட்டாக்களையும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக 100+ வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) வருகின்றன. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 மாடலில் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. நோட்டிபிகேஷன் சப்போர்ட் உள்ளது.

வெதர் அப்டேட்கள் (Weather Updates), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), ரீமைண்டர்கள் (Reminders) போன்ற வழக்கமான பீச்சர்களும் கொண்டிருக்கிறது. 7 நாட்கள் பேக்கப் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் பிடிக்கும்.

ஸ்டான்ட்பை டைம் (Standby Time) 30 நாட்களுக்கு கிடைக்கும். ஜேட் பிளாக் (Jet Black), ஸ்பேஸ் ப்ளூ (Space Blue), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), ரோஸ் கோல்டூ பிங்க் (Rose Gold Pink), ஸ்டார்லைட் கோல்டு (Starlight Gold) மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் கொண்ட சில்வர் லிங்க் (Silver Link), பிளாக் லிங்க் (Black Link) கலர்கள் வருகிறது.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 4 மாடலின் சிலிகான் வேரியண்ட்டின் விலை ரூ.2499ஆக இருக்கிறது. அதேபோல மெட்டாலிக் வேரியண்ட்டின் விலை ரூ.2,799ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), நாய்ஸ் வெப்சைட் (Noise Website) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு வருகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pulse 4 With Bluetooth Calling Sale From April 26 on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X