பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி?

|

பூமியின் ஓசோன் படலத்திலிருந்த மிகப்பெரிய ஓட்டை அடைந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டனர். அதேபோல், தற்பொழுது பூமிக்கு மிக அருகாமையில் நிகழப்போகும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பூமியை இன்று மிகப்பெரிய சிறுகோள் 1998 OR2 என்ற அபாயகரமான அஸ்டிராய்டு, பூமியைக் கடந்து செல்கிறது. இதை நேரலையில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பூமியைக் கடக்கும் சிறுகோள் 1998 OR2

பூமியைக் கடக்கும் சிறுகோள் 1998 OR2

இந்த அபாயகரமான சிறுகோள் 1998 OR2, ஏப்ரல் 29ம் தேதி புதன்கிழமை அதாவது, இன்று பூமியைக் கடந்து செல்கிறது. இந்த நிகழ்வில் உள்ள ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மாபெரும் சிறுகோள் பூமியின் மேற்பரப்பின் எந்தப் பகுதியையும் தாக்காமல், பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் பூமிக்கு மிக அருகாமையில் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரத்தில் பூமியை கடக்கிறது

எவ்வளவு தூரத்தில் பூமியை கடக்கிறது

அதிகாரப்பூர்வ தகவலின்படி, சிறுகோள் (52768) 1998 OR2 என்று அழைக்கப்படும் இந்த விண்வெளியிலிருந்து வரும் சிறுகோள் பாறை பூமியிலிருந்து சுமார் சுமார் 6.29 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்தது சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்.! அடேங்கப்பா இவ்வளவு கோடியா?வெளிவந்தது சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்.! அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

இந்த சிறுகோள் அளவு என்ன?

இந்த சிறுகோள் அளவு என்ன?

அதேபோல், NEO என்று சொல்லப்படும் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களில் ஒன்றான இந்த சிறுகோள் 52768, சுமார் 0.9 மைல் முதல் 2.54 மைல்கள் விட்டம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேசிபோ ஆய்வகத்தின் அறிவிப்பு என்ன சொல்கிறது

அரேசிபோ ஆய்வகத்தின் அறிவிப்பு என்ன சொல்கிறது

இந்த சிறுகோள் 1998 OR2 தோராயமாக சுமார் 1.5 கி.மீ முதல் 4.1 கி.மீ தூரம் கொண்ட விட்டதைக் கொண்டுள்ளது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் சிறுகோளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரேசிபோ ஆய்வகத்தின் அறிவிப்புப்படி புதன்கிழமை பிற்பகல் 3:26 மணியளவில் பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோள் கடந்து செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

மக்கள் நேரலை காண அரேசிபோ ஆய்வகம் ஏற்பாடு

மக்கள் நேரலை காண அரேசிபோ ஆய்வகம் ஏற்பாடு

பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்லும் இந்த சிறுகோளின் நிகழ்வை மக்கள் நேரலை காண அரேசிபோ ஆய்வகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வை உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அரேசிபோ ஆய்வகத்தின் வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரலை பார்க்கலாம். எப்படி இந்த நேரலையைப் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ வளைத்ததில் நேரலை பார்க்க

அதிகாரப்பூர்வ வளைத்ததில் நேரலை பார்க்க

  • பூமியை இந்த சிறுகோள் விண்வெளியில் UTC நேரத்தின்படி சரியாக இன்று மாலை 6 மணிக்கும், IST நேரத்தின் படி சரியாக இரவு 11.30 மணிக்குக் கடந்து செல்கிறது.
  • விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ வளைத்ததில் நேரலை பார்க்க https://www.virtualtelescope.eu/webtv இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்.
  • UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!

    YouTubeல் நேரலை காண இந்த லிங்க்

    YouTubeல் நேரலை காண இந்த லிங்க்

    • Live YouTube சேனலுக்கான இணைப்பைப் பெற Asteroid OR2 live கிளிக் செய்யுங்கள்.
    • ஆய்வகத்திலிருந்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளபடி, சிறுகோள் OR2 பூமியிலிருந்து பார்க்கும்போது ஹைட்ரா விண்மீன் மண்டலத்திற்கு மேலேயும் லியோ விண்மீன் மண்டலத்திற்கு கீழேயும் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How To Watch Live Stream Of Asteroid 1998 OR2 Passes The Earth’s Surface Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X