வெளிவந்தது சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்.! அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

|

ஆல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 281மில்லியன் டாலர் வருமானமாக வழங்கியுள்ளது. குறிப்பாக இந்திய ரூபாயில் இது 2,144கோடி ஆகும். மேலும் இதன் மூலம் உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நிர்வாகிகளில் ஒருவராக சுந்தர்பிச்சை உள்ளார்.

ஊழியர்களின் மொத்த ஊதிய

மேலும் அவருடைய வருமானத்தில் பெரும்பான்மை சதவீதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பங்குகள் மூலம் கிடைக்கும்வருமானம் எனக் கூறப்படுகிறது. பின்பு அவருக்கு இப்படியாக கிடைக்கும் ஈவுத்தொகை வருமானம் மட்டுமே ஆல்பாபெட்ஊழியர்களின் மொத்த ஊதிய சராசரியைக் காட்டிலும் 1,085 மடங்கு உயர்ந்துள்ளது.

 தங்கள் பொறுப்புகளில்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 2019-ம் ஆண்டு 6.5லட்சம் டாலராக இருந்தது, இது இந்த ஆண்டு 2மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லாரி பேஜ், செர்கி பிரின் இருவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறியதை அடுத்து ஆல்பாபெட் சிஇஓ பதவி சுந்தர்பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.

செல்போனுக்கு தாலிக் கட்டிய மாப்பிள்ளை., தனக்கு தானே தாலிக் கட்டிய மணப்பெண்: வீடியோகால் திருமணம்!செல்போனுக்கு தாலிக் கட்டிய மாப்பிள்ளை., தனக்கு தானே தாலிக் கட்டிய மணப்பெண்: வீடியோகால் திருமணம்!

வேலைவாய்ப்பு

தற்சமயம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சாவல்கள் சுந்தர் பிச்சைக்கு முன் உள்ளன. ஏற்கனவே வேலைவாய்ப்பு, முதலீடு குறித்து சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூகுளில்

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர், அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை. ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ - இது எல்லோருக்குமே தெரியுமே..!! அவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட இதையெல்லாம் சொல்லி விடும்.

எல்லாம் அறிந்த

ஆனால், எல்லாம் அறிந்த விக்கிப்பீடியா கூட அறியாத சிலசுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து
எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

பொறியாளரான சுந்தர் பிச்சை

ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.

இரசாயன பொறியாளர்

ஒரு இரசாயன பொறியாளர் ஆன சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐஐடி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத்
தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு மின் பொறியாளராக தன் வேலையில் சந்தித்த சவால்களை பற்றி இளம் சுந்தர் பிச்சையிடம் பேசியதின் மூலம் தான் தன் மகனுக்கு தொழில்நுட்பம் மீது ஆர்வம் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சையின் தந்தை நம்புகிறார்.

பிச்சை குழந்தையாக

சுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை டயல் செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.!

 ஸ்டான்போர்ட்

ஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் என அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை என்பது வெளிப்படை.

சுந்தர் பிச்சை சேர்வதற்கு

கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார். சுந்தர் பிச்சை எப்போதுமே கூகுள் நிறுவனத்தில் நிகழும் அரசியல் மற்றும் நாடகங்களில் இருந்து வெளியே தங்கி
இருக்கும் திறமை பெற்றவர் ஆவார்.

News Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Alphabet CEO Sundar Pichai Salary Revealed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X