மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

|

மே மாத இறுதிக்குள் இந்தியாவில் 4 கோடி பேர் மொபைல் இல்லாமல் இருப்பார்கள் என்பதால் அத்தியாவசிய தேவை பொருட்களில் மொபைல் போன் சேவையை தொடங்கவும் அதற்கான காரணத்தை வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,892 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. 6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்றும் உறுதி செய்யப்பட்டதோடு 151 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 1,821 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

1990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

1990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

இந்தியாவில் மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை உறுதி செய்வதற்கு மத்திய அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்

இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்

இந்த நிலையில் இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லாக்டவுன் தொடர்ந்தால், மே மாத இறுதியில் நாட்டில் 4 கோடி மொபைல் பயனர்களிடம் குறைபாடு ஏற்படலாம் எனவும் மொபைல் போன் இல்லாமல் போக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மொபைல் போன் இல்லாத நிலை ஏற்படும்

மொபைல் போன் இல்லாத நிலை ஏற்படும்

தற்போது, ​​2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் வாடிக்கையாளர்களிடம் மொபைல் போன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொபைல் போன் கோளாறு, செயல்படாத நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மொபைல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லா சேவைகளையும் அணுகுவதில் முக்கியத்துவம் வாய்ந்த மொபைல்

எல்லா சேவைகளையும் அணுகுவதில் முக்கியத்துவம் வாய்ந்த மொபைல்

தொலைத்தொடர்பு, இணையம், ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் செயல்பாடுகளை அரசாங்கம் அனுமதித்துள்ளது, ஆனால் இந்த எல்லா சேவைகளையும் அணுகுவதில் முக்கியத்துவம் வாய்ந்த மொபைல் சாதனங்கள் விற்பனையை அரசு அனுமதிக்கவில்லை.

அத்தியாவசிய சேவைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய கோரிக்கை

அத்தியாவசிய சேவைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய கோரிக்கை

"அத்தியாவசிய சேவைகள்" வகையை விரிவுபடுத்துவதற்கான புதிய கோரிக்கையை முன்வைத்து ஐசிஇஏ மற்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி), மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் விற்பனை மற்றும் சேவைகளை அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐ.சி.இ.ஏ மற்றும் சி.ஏ.ஐ.டி

ஐ.சி.இ.ஏ மற்றும் சி.ஏ.ஐ.டி

ஏப்ரல் 22 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிய கூட்டு கடிதத்தில், தொழில்துறை அமைப்புகளான ஐ.சி.இ.ஏ மற்றும் சி.ஏ.ஐ.டி ஆகியவை மொபைல் சாதனங்கள் மற்றும் அதன் உபகரணங்களை மேலும் தாமதமின்றி விற்பனை செய்ய அனுமதிக்க பரிந்துரைத்தன.

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் மடிக்கணினிகள், மொபைல்

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் மடிக்கணினிகள், மொபைல்

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் மடிக்கணினிகள் உள்ளிட்ட மொபைல் சாதனங்களை சேர்க்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

iQOO 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!iQOO 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஆரோக்யா சேது பயன்பாடு

ஆரோக்யா சேது பயன்பாடு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் அரசாங்கத்தின் ஆரோக்யா சேது பயன்பாடு 6 கோடிக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் இயங்குகிறது. அதாவது டிஜிட்டல் முறையில் கொரோனா பரவாமல் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மொபைல் போன் விற்பனையை தொடங்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
4 crore mobile phone users in the country are expected to be without handsets: ICEA

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X