UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!
ஏலியன் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? ஏலியன்கள் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளில் பூமியை வளம் வருகிறார்களா? என்று பல கேள்விகளுக்கான பதில் தற்பொழுது கிடைத்துவிட்டது. இந்த முறை இதற்கான பதில் அமெரிக்கா அரசாங்கத்திடம் இருந்தே நேரடியாக வந்துள்ளது. ஆம், அமெரிக்கா அரசாங்கமே மூன்று அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் வீடியோ ஆதாரத்தை தற்பொழுது அதன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இது ஒரு வரலாற்றுத் தருணம்
முதல் முறையாக அரசாங்கமே முன்வந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்றே கூற வேண்டும். UFO என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத அன்னிய பறக்கும் பொருள்கள் உண்மையில் பூமிக்கு மேலே உள்ள வானத்தில் காணப்பட்டுள்ளது என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவாகும். இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் மூன்று வீடியோக்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

UFO தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட மூன்று வீடியோ
இந்த மூன்று வீடியோகளிலும் அடையாளம் தெரியாத அன்னிய பறக்கும் பொருள்கள் அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அடையாளம் தெரியாத அன்னிய பறக்கும் பொருள்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படை விமானிகளால் வானத்தில் வேகமாக நகரும் பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க கடற்படை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானில் அன்னிய பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான ஆதாரம்
யுஎஃப்ஒ-க்கள் பற்றிய பல தசாப்த கால ஊகங்களுக்குப் பிறகு, தற்பொழுது அரசாங்கமே முன்வந்து வானில் அன்னிய பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான ஆதார வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு வெளிப்படையாக வெளியிடுவது இதுவே முதல் முறை. "FLIR," "GOFAST" மற்றும் "GIMBAL" என்ற தலைப்பில் மூன்று அன்னிய பறக்கும் பொருட்களின் வீடியோக்களை அமெரிக்க கடற்படை ஏர் சிஸ்டம்ஸ் கட்டளை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இது கடற்படை வீடியோக்கள் தான் ஒப்புக்கொண்ட கடற்படை
இந்த வீடியோக்களில் ஒரு வீடியோ நவம்பர் 2004 இல் அமெரிக்க கடற்படை விமானிகளால் பதிவு செய்யப்பட்டது, அதேபோல், மற்ற இரண்டு வீடியோக்களும் ஜனவரி 2015ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோகள் சிறிது காலத்திற்கு முன்பு பொது வலைத்தள களத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் "யு.எஸ். கடற்படை மௌனம் சாதித்தது, ஆனால் தற்பொழுது இந்த வீடியோக்கள் உண்மையில் கடற்படை வீடியோக்கள் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளது.

இராணுவ வான்வெளி ஊடுருவல்கள் தொடர்பான விசாரணை
ஒரு முழுமையான ஆய்வுக்குப் பிறகு, இந்த வகைப்படுத்தப்படாத வீடியோக்களின் அங்கீகரிக்கப்பட்ட வெளியீடு எந்தவொரு உணர்திறன் திறன்களையும், அமைப்புகளையும் வெளிப்படுத்தாது என்றும், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளால் இராணுவ வான்வெளி ஊடுருவல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் இது ஒரு தடையாக இருக்காது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

பல்வேறு இராணுவ கட்டுப்பாட்டு எல்லைக்குள் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்
சமீபத்திய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் பல்வேறு இராணுவ கட்டுப்பாட்டு எல்லைகள் மற்றும் நியமிக்கப்பட்ட வான்வெளியில் நுழைந்ததாகப் பல தகவல்கள் மற்றும் புகார்கள் வந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளுக்காக, கடற்படை மற்றும் USAF இந்த அறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்து, ஒவ்வொரு அறிக்கையையும் தெளிவாக விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானிகளின் முதல் வாக்குமூலம்
இரண்டு போர் விமானிகளின் முதல் வாக்குமூலம் 2004ம் ஆண்டு சம்பவத்தைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பசிபிக் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 40 அடி நீளமுள்ள அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் நீரின் மேற்பரப்பிலிருந்து 50 அடி உயரத்தில் சுற்றித் திரிந்ததைக் கண்டதாகவும், விமானிகள் அடையாளம் கண்ட சில நொடிகளில் வேகமாக மறைந்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதா?
இந்த வீடியோக்கள் இப்போது அனைவருக்கும் காணக் கிடைத்தாலும், உண்மையில் இந்த அடையலாம் தெரியாத விமானங்கள் என்ன? இவை உண்மையில் ஏலியன் விண்கலங்கள் தானா? இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது இவற்றை அரசாங்கம் கண்காணித்து வருகிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எது எப்படியாக இருந்தாலும் அரசாங்கம் UFO பற்றி ஒப்புக்கொண்டது ஆச்சரியம் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications